செய்திமுரசு

கொவிட்-19 -நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய சாத்தியம்!

– உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மிகவும் நீண்டகாலத்துக்கு நடத்தவேண்டிய சாத்தியப்பாடு இருப்பதாக கூறியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானியான வைத்தியர் சௌமியா சுவாமிநாதன், வேறு பொதுச்சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்த்து கடைப்பிடிக்கப்படாதபட்சத்தில் ஊரடங்கு மாத்திரம் பயனுறுதியுடையதாக அமையமுடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். காசநோய் மற்றும் எச்.ஐ.வி. தொடர்பாக 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்த ;வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் முன்னர்  இந்திய அரசாங்கத்தின் சுகாதார ஆராய்ச்சிக்கான செயலாளராகவும் 2015-2017 காலகட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸிலின் பணிப்பாளர் நாயகமாகவும் ...

Read More »

பிரான்சில் மே மாதம் வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 11-ம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 22 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 568 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் ...

Read More »

முடக்கப்பட்ட தாராபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8 ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் குறித்த கிராமம் நேற்று திங்கட்கிழமைமாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகள் சமமாக நடத்தப்படுகின்றார்களா?

கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேன்பெராடைமஸ் பத்திரிகையில் தனது கருத்தினை எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியரான முனைவர் ஜான் மின்ஸ். உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதே முதன்மையான உத்தரவாக உள்ளது. பிற நாடுகளைப் போல ஆஸ்திரேலியாவிலும் இதே போன்ற உத்தரவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 4.23 லட்சம் நோயாளிகள்

உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசின் பாதிப்பில் இருந்து 4.23 லட்சம் நோயாளிகள் மீண்டுள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இன்று ...

Read More »

புலம்பெயர் , உள்நாடு இலங்கையர்கள் வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட விசேட வைப்புக் கணக்கு!

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் ‘விசேட வைப்புக் கணக்கு’ என்ற பெயரில் புதிய வங்கிக் கணக்கொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் இந்த மாற்று திட்டங்களை கையாள்கின்றது எனவும் கூறுகின்றது. நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் மக்களின் பொருளாதார தன்மைகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கூடும் கொரோனா நிவாரண வேலைத்திட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் ஜனாதிபதியின் அறிவுரைக்கு அமைய எடுக்கப்பட்டுள்ளது அதாவது ...

Read More »

“சார்வரி” தமிழ் புத்தாண்டு இன்று பிறக்கிறது!

சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி 2020, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் ...

Read More »

கரோனா வைரஸ் தாக்குததல் வரும்; 10 ஆண்டுகளாக உலகை எச்சரித்த பில்கேட்ஸ்

கரோனா வைரஸ் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் எச்சரித்து வந்துள்ளார், அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் கடுமையாக இதுகுறித்துப் பேசி வந்துள்ளார். யுத்தத்துக்குத் தயாராவதை விட வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் என பில்கேட்ஸ் வலியுறுத்தியதை உலக நாடுகள் அலட்சியம் செய்ததால் இன்று அதற்கான விலையைக் கொடுக்கின்றன. உலகளாவிய தொற்று பாதிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் பேசி எச்சரித்து வருகிறார். தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கும், மருந்து கண்டுபிடிக்கவும் சொந்தமாக அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் தனது வருமானத்தின் ...

Read More »

ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசிய தாய்!

கணவருடன் ஏற்பட்ட தகராறில் கல்நெஞ்ச தாய் ஐந்து குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். இங்கு மிரிதுல் யாதவ் – மஞ்சு தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் ஐந்து குழந்தைகள் இருந்தனர். கணவன் – மனைவிக்கு இடையே கடந்த ஒருவருடமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நேற்றிரவு கருத்து வேறுபாடு அதிகரித்து கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் மஞ்சு தனது குழந்தைகளை ...

Read More »

வவுனியா மாவட்டத்தில் பட்டினியை எதிர்நோக்கும் அவல வாழ்வு !

வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்ந்து ; கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் ஊரடங்குச்சட்ட காலகட்டத்தில் கூலிவேலைகள் கூட கரம் கிட்டாமல் அன்றாடம் அரைவயிற்று கஞ்சிக்கே கஸ்டப்படும் நிலையில் வாழ்கின்றனர். நீங்கள் பார்க்கும் இடம் ஆடுமாடுகள் வசிக்கும் இடமல்ல மனிதன் வசிக்கும் கூடாரம் அதுவும் வவுனியா தவசிகுளம் ஆற்றங்கரையோர குடியிருப்பிலேயே இந்த இளம் குடும்பம் வசித்து வருகின்றது. இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் ஜேசுபுரம், கிறீஸ்தவகுளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம், கப்பாச்சி, வீரபுரம், மரையடித்தகுளம், ...

Read More »