லண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் மிற்சம் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் தாயார் உயிருக்கு போராடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு உயிரிழந்த சிறுமி 5 வயதுடைய சாயகி கருணாநந்தம் எனவும் காயங்களுடன் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உயிருக்காகா போராடிவரும் தாயார் 35 ...
Read More »செய்திமுரசு
முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் விசாரணை
ஆயுதம் தாங்கிய ஒருவரின் படம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இளைஞரிடம் மூன்று மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் யாழ்ப்பாண ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் மேலும் கூறியுள்ளதாவது; வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படம் ஒன்றினை எனது முகநூலில் அண்மையில் பதிவேற்றம் செய்திருந்தேன். அதற்காகவே, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் என்னை விசாரணைக்காக ...
Read More »கேப்பாபுலவு இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது!
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை பேணினார். புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்தார் என்ற குற்ற சாட்டின் பேரில் முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் தனது காணியை பறிகொடுத்து சொந்த நிலத்தை மீட்பதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களில் ; பங்கெடுத்தவரும் காணாமல் ஆக்கபட்டவரின் சகோதரனுமான நவரத்தினம் டிலக்சன்(வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (29) குறித்த இளைஞரின் வீட்டுக்கு வேன் ;ஒன்றில் வந்த பயங்கரவாத ...
Read More »சரணடைந்தவர்கள் குறித்து அரசே பதிலளிக்க வேண்டும்
விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என சவேந்திரசில்வா தெரிவிப்பாராயின் இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; போர்க்காலத்திலும், போரின் இறுதியிலும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டோர் விடயத்தில் இறந்துவிட்டார்கள் என்ற பதிலுக்குப் பதிலாக இலங்கை ...
Read More »உலக சுகாதார நிறுவன குழு, சீனா செல்கிறது
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. ஆனால் வுகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு இடையே, ...
Read More »மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்
தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் என்றும் கூறுகின்றார். வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு ...
Read More »விடுதலைப் புலிகள் மீள உருவாக்கம் ….. கிளிநொச்சியில் இளைஞர்கள் கைது!
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கடந்த மாதம் கிளிநொச்சியில் 22 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என வடக்கிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையோடு மாதம் முழுமையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர் என ...
Read More »எலி தின்ற நிலையில் 4 வயது சிறுமியின் அழுகிய சடலம்
அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அழுகிய நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்ற நிலையில் அழுகிய கோலத்தில் சிறுமியின் சடலம் மீட்கபட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43) ஆகிய இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி ...
Read More »கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படும் என்பதுடன் அனைவரும் அணுகும் வகையில் புதிய கல்வி முறைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோவின் அறிக்கை: பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் போதிய சமூக விலகலை அனைத்து நாடுகளும் முழுமையாகபின்பற்ற இயலாது. இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கற்றலில் கணிசமான பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ...
Read More »தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை!
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்திரிபாலசிறிசேனவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதி காவல் துறைமா அதிபர்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து மாதத்திற்கு ஒருமுறை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மதிப்பீட்டு கூட்டமொன்றை நடத்துவது வழமை என அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீட்டு அறிக்கையொன்றை ...
Read More »