செய்திமுரசு

செ.கணேசலிங்கன்: ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி

ஈழத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக நாவல் உலகில் புதிய பாதையை வகுத்த முன்னோடியான செ.கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021) மறைந்தார். அவருக்கு வயது 93. இலங்கையின் ’தினகரன்’ நாளிதழில் 1950-ல் தனது முதல் சிறுகதையை எழுதிய அவர், தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் சமூக அவலங்களைத் தனது எழுத்துகளின் மூலம் பல்வேறு பரிமாணங்களில் தோலுரித்துக் காட்டியிருந்தார். யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தில் 1928 மார்ச்-9 அன்று பிறந்த செ.கணேசலிங்கன் அரசுப் பணியாற்றி 1981-ல் ஓய்வு பெற்றார். 1950-களில் தொடங்கி, மறையும் வரை தொடர்ந்து எழுத்துப் பணியில் ...

Read More »

ஆஸ்திரேலியா: ‘அகதிகள்’ எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 75 அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் அகதிகள் நல செயல்பாட்டாளர் ஐன் ரிண்டோல். “ஒருவரை விடுதலைச் செய்யும் பொழுது தடுப்பில் உள்ள அகதிகள் மோசமாக உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களும் எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான அமின் அப்ரவி.

Read More »

நியூசிலாந்தில் 2027 முதல் சிகரெட் விற்பனையில் புதிய கட்டுப்பாடு

நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல், சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.</strong></p> 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027-ல் 14 வயதை எட்டும் அனைவருக்கும், நிரந்தரமாக சிகரெட் விற்க தடை விதிக்கப்பட உள்ளது. இதன், மூலம் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும், என அந்நாட்டு சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆயிஷா வெரால் கருத்து தெரிவித்தார்

Read More »

கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி இந்த வருடம் இந்திய தளபதி ஹெலிக்கொப்டர் விபத்துக்களில் பலி – பிரபல ஆய்வாளர் தெரிவிப்பது என்ன?

இந்திய முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் ஒப்பிட்டு டுவிட்டரில் கருத்துக்கள்வெளியாகின்றன. லடாக்கில் காணப்படும் நிலை காரணமாக இந்த ஹெலிக்கொப்டர் விபத்தி;ன் பின்னணியில் சீனா இருக்கலாம் என தெரிவித்துள்ள டுவிட்டர் பயனாளர்கள் தாய்வானில் கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி சென் யி மிங்கும் பல முக்கிய இராணுவதளபதிகளும் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் தாய்பேயிற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அவர்கள் கொல்லப்பட்டனர். சென் தாய்வான் இராணுவத்தின் சிரேஸ்ட ...

Read More »

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண சபையின் ஆளுநர் ராஜா கொலுரே மரணமடைந்ததை அடுத்த ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

சிட்னியில் உல்லாச படகில் பயணம் செய்த சிலருக்கு Omicron தொற்று?

வெள்ளிக்கிழமை இரவு சிட்னி Harbour boat cruise-இல் இருந்தவர்களில் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அதிலிருந்த சுமார் 140 பேரைத் தொடர்பு கொள்ள சுகாதார அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் இருவருக்கு Omicron தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Omicron திரிபானது ஏற்கனவே பரவியுள்ள  கோவிட்-19 திரிபுகளைக் காட்டிலும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்றபோதிலும் இன்னும் எச்சரிக்கை தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. நாட்டிலுள்ள 5-11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலான  இறுதி ...

Read More »

எங்களை சுடத் துவங்கினார்கள்…

நாகலாந்தில் ராணுவ வீரர்களின் தாக்குதலில் உயிர் பிழைத்த நபர்களை நேரில் சந்தித்து பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் நாகலாந்தில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் தங்கள் அனுபவத்தினை இந்தியன் எக்ஸ்பிரசிற்கு பகிர்ந்துகொண்டுள்ளனர்.  நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் அது… அவர்கள் எங்களை அங்கேயே தாக்கினார்கள் என்று 23 வயது ஷெய்வாங்க் கூறினார். நாகலாந்து மாநிலம் ஓட்டிங் கிராமத்தில் சனிக்கிழமை சுரங்கத் தொழிலாளிகள் 8 பேர் மீது ராணுவத்தினர் நடத்திய ...

Read More »

ராணுவ உலங்கு வான ஊர்தி விபத்து- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி

உலங்கு வான ஊர்தி விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார். குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ உலங்கு வான ஊர்தி விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ உலங்கு வான ஊர்தி மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read More »

மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்

1799-ம் ஆண்டு மாவீரர் நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார். 1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ...

Read More »

மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் உள்ள இடங்கள் கூட காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுவதுடன் 6 அடிக்கு மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் இருக்குமென்றால் அந்த இடம் காடாக ஒதுக்கப்பட்ட இடமாகவும் அதேபோல் கூகுள் வரைபடத்தில் பார்த்து கொஞ்சம் பச்சை வட்டமாக இருந்தால் அதுவும் ஒரு காட்டுப் பிரதேசமாகவும் ஒதுக்கப்படும் அவலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு ...

Read More »