1799-ம் ஆண்டு மாவீரர் நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன.
மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார்.
1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்
இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:-
தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார்’ என்றார்.
நெப்போலியனின் இந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது. பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது.
ஆனால் ஜெனரல் மனைவி தனது கடனை அடைப்பதற்காக வாளை விற்றுள்ளார் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal