இந்திய முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் ஒப்பிட்டு டுவிட்டரில் கருத்துக்கள்வெளியாகின்றன.
லடாக்கில் காணப்படும் நிலை காரணமாக இந்த ஹெலிக்கொப்டர் விபத்தி;ன் பின்னணியில் சீனா இருக்கலாம் என தெரிவித்துள்ள டுவிட்டர் பயனாளர்கள் தாய்வானில் கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி சென் யி மிங்கும் பல முக்கிய இராணுவதளபதிகளும் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் தாய்பேயிற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
சென் தாய்வான் இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரி என்பதும் விமானப்படையின் முக்கிய அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தயாரிப்பான யுஎச் 60 எம் பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டரே விபத்துக்குள்ளானது.
இந்திய முப்படை தளபதியும் தாய்வானின் முப்படைகளின் பிரதானியும் ஹெலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்டமையை ஒப்பிட்டு புவிமூலோபாய நிபுணர் பிரம்ம செல்லானே கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
ஜெனரல் ராவத்தின் மரணத்திற்கும் 2020 இல் தாய்வானின் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சென் யி மிங் உட்பட பலமுக்கிய அதிகாரிகள் ஹெலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்டமைக்கும் இடையில் அச்சமூட்டுகின்ற சமாந்திரம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு ஹெலிக்கொப்டர் விபத்தும் சீனா இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கியமானவராக காணப்பட்டவரை அகற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த இரு விபத்துக்களிற்கும் இடையில் தொடர்பில்லை,ஆச்சரியமான சமாந்திரம் காணப்பட்டாலும் இந்த இரு விபத்துகளிற்கும் இடையில் தொடர்பில்லை,மேலும் வெளிச்சக்தி தொடர்புபட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Eelamurasu Australia Online News Portal

