அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின் படகுக் கொள்கையினால் பல ஆண்டுகள் மனுஸ்தீவிலும் நவுருத்தீவிலும் உள்ள தடுப்பில் இருக்க வேண்டி வந்தது. நவுருத்தீவில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட இதயப்பிரச்னை இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட போதிலும் அவரது உயிரைப் பறித்து விட்டது. ஆம், அவர் தனது 39வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளே இதயப்பிரச்னையில் உயிரிழந்து ...
Read More »செய்திமுரசு
இலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்கள்
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 909 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 878 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹர சிறைச்சாலையில் 827 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 450 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ,இது வரையில் கொரோனா தொற்றில் இருந்து ...
Read More »இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என ...
Read More »தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு தடை
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி காவல் துறை மற்றும் வனவள திணைக்களத்தினரை அனுப்பி வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை (27)இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை ...
Read More »76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாகக் ...
Read More »பௌத்த மயமாகும் வட்டுவாகல்
சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் (25) நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து ...
Read More »சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்
ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. இதனால் இந்த தளத்தில் செய்திகளை வாசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சட்டமா அதிபருக்கு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரால் குறித்த அறிக்கை இன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதி காரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய (2-5) பிரதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப் படைக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித் துள்ளார்.
Read More »13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தல்
இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார். இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித ...
Read More »ஒரு பலமான கூட்டணிக்கான காலம்
அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்குகொள்ளவில்லை. சுமந்திரன் தரப்பு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal