உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரால் குறித்த அறிக்கை இன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதி காரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய (2-5) பிரதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப் படைக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித் துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal