செய்திமுரசு

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர்வதை சபாநாயகருக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்க எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையடல் செவ்வாய் கிழமை காலை இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

மீண்டும் பிரதமராக ரணில் பதவிப்பிரமாணம்!

சிறிலங்காவின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று(16)  பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதனடிப்படையில் 5 ஆவது முறையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Read More »

ஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அலரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியல் நெருக்கடியில் இலங்கை பல திருப்பங்களையும் நெளிவு சுழிவுகளையும் கண்டுவிட்டது. விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ஆனால், பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாதபோதிலும் கூட ராஜபக்ச பதவியை இறுகப்பற்றிப் பிடித்ததுக்கொண்டேயிருக்கிறார். சபைக்குள் பெரும்பான்மைப் பலம் இல்லாத ராஜபக்சவும் அவரது நேசக் கட்சிகளும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்துவருகின்றார்கள். ...

Read More »

உயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி!-சமந்தா பவர்

நாடாளுமன்றை கலைத்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்” என ஐ.நாவிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ளவுள்ளதாக வெளியான தகவலையடுத்தே சமந்தா பவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இலங்கை மக்கள் சுதந்திரமான ஊடகங்கள் சிவில் சமூகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தான் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தனது ...

Read More »

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேமை பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதேபோல் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரையும் அம்முறைப்பாட்டிற்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை எனவே ஏற்கனவே எங்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக கோரிக்கை ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையளித்திருந்தனர். வவுனியாவில் அமைந்துள்ள ...

Read More »

அவுஸ்திரேலிய அரசை ஏமாற்றிய 6000 பேர்!

அவுஸ்திரேலிய ஓய்வூதியத்தினை வெளிநாடுகளில் இருந்துகொண்டு பெறுகின்றவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தாம் இருப்பதனை அவுஸ்திரேலிய அரசுக்கு உறுதிப்படுத்தவேண்டும் என்ற புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தபட உள்ளது. ஏனெனில் இறந்த பின்னரும் அவர்களுக்குரிய ஓய்வூதியத்தை அரசாங்கம் தொடர்ந்து கொடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வரவு செலவுத்திட்டம் முதல் இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது. சுமார் ஒரு லட்சம் அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு ஓய்வூதியத்தை பெற்றுவருகிறார்கள். மேலும் இறந்துபோன ஆறாயிரம் பேரின் கணக்குகளுக்கும் தொடர்ந்தும் ஓய்வூதியத்தை அரசு ...

Read More »

முதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் அவுஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந் நிலையில் இவ் விரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பேர்த்தில் ஆரம்பமானது. ...

Read More »

தாய்நிலத்தை விட்டு வெளியேற்றும் வெனிசுவேலா மக்கள்!

கடந்த நான்கு ஆண்டுகளில் இருபது லட்சத்திற்கும் அதிகமான வெனிசுவேலா மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்த லத்தீன் அமெரிக்க தேசத்தில்? மின்சாரமில்லை, உணவில்லை, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்கிறார்கள் அம்மக்கள். புகைப்படகலைஞர் கிலென்னா கோர்டன் கொலம்பியா எல்லையில் பயணம் செய்து வெனிசுசேலாவிலிருந்து வெளியேறும் குடும்பங்களை சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களும், கோர்டனிடம் அவர்கள் பகிர்ந்த தகவல்களும்தான் இந்தத் தொகுப்பு. இந்த நதி கொலம்பியா மற்றும் வெனிசுவேலா எல்லையில் இருக்கிறது. இங்கு சட்டரீதியாக எல்லையை கடக்கும் பகுதி ...

Read More »

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா?

இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் பேர்த் ஆடுகளத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான விதத்தில் தயாரிக்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல்களால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களிற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தை தயாரிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டுள்ளனர் என ஆடுகள தயாரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப் தெரிவித்துள்ளார். பந்து உயர எழும்பி பார்ப்பதை பார்ப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது எனக்கு முன்கூட்டியே கிறிஸ்மஸ் பரிசு கிடைத்துள்ளதை போன்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எதிரணி ...

Read More »