அவுஸ்திரேலிய அரசை ஏமாற்றிய 6000 பேர்!

அவுஸ்திரேலிய ஓய்வூதியத்தினை வெளிநாடுகளில் இருந்துகொண்டு பெறுகின்றவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தாம் இருப்பதனை அவுஸ்திரேலிய அரசுக்கு உறுதிப்படுத்தவேண்டும் என்ற புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தபட உள்ளது.

ஏனெனில் இறந்த பின்னரும் அவர்களுக்குரிய ஓய்வூதியத்தை அரசாங்கம் தொடர்ந்து கொடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்தே இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வரவு செலவுத்திட்டம் முதல் இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது.

சுமார் ஒரு லட்சம் அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு ஓய்வூதியத்தை பெற்றுவருகிறார்கள்.

மேலும் இறந்துபோன ஆறாயிரம் பேரின் கணக்குகளுக்கும் தொடர்ந்தும் ஓய்வூதியத்தை அரசு அனுப்பிக்கொண்டிருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது என சமூக சேவைகள் அமைச்சர் Paul Fletcher தெரிவித்துள்ளார்.