செய்திமுரசு

நியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட சமூக ஆர்வலர்!

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ...

Read More »

அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்!

ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த அடாவடித்தனச் செயற்பாடு மத ரீதியானது மட்டுமல்ல. ஆக்கிரமிப்புக்கான போர்க்குணம்; கொண்டதோர்  அரசியல் நடவடிக்கையும்கூட. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்போக்கிலான சண்டித்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும். இந்த இறுதிக்கிரியை நீதிமன்ற உத்தரவை மீறிச் செய்யப்பட்டன. இந்துக்களின் மதரீதியான கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை ...

Read More »

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு! அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி. க்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல் துறை  பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் ...

Read More »

தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த தயார்!

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர்.   இம்முறை தேர்தலில் தமிழ் -முஸ்லிம் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தல்களை போல் அல்லாது பல புதிய ...

Read More »

டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் – வடகொரியா

இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று வடகொரியா வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகர் கிம் கே குவான் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு ...

Read More »

தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – சிட்னி

தமிழ்மக்களின் சுதந்திர விடிவிற்காக நீரின்றி உணவின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் நினைவுநிகழ்வு, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை 26 – 09 -2019 அன்று மாலை 7.30 மணிக்கு வென்வேத்வில் றெட் வைறோன் சமூக மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.   இளம் செயற்பாட்டாளர் சிந்துஜன் ஞானமூர்த்தி நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடரை லெப்ரினன்ற் கேணல் அக்பர் அவர்ளின் மூத்தமகன் பிறைக்குமரன் ஏற்றி நிகழ்வை தொடக்கிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கொடியை இளம் செயற்பாட்டாளர் நிலா ஏற்றிவைக்க, தமிழீழ தேசிய கொடியை ...

Read More »

அப்பட்டமான சாட்சியம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது. சிங்கள ...

Read More »

லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம்!

பிரித்தானிய விமானப் பொறியியலாளர்களினால் உருவாக்கப்படுகின்ற புதிய hypersonic-விமான இயந்திர தொழில்நுட்பத்தின் உதவியுடன் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Synergetic Air Breathing Rocket Engine என்ற இந்தப்புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய அதிவேக பறப்பு இயந்திரத்தினை விமானங்களில் பொருத்துவதன் மூலம் பாரம்பரிய பறப்பு இயந்திரங்களைவிட பலமடங்கு வேகத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Reaction Engines நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read More »

டயனா கண்ணிவெடிகள் ஊடாக நடந்த பகுதியில் இளவரசர் ஹரியும் நடந்தார்!

ஆபிரிக்க நாடுகளிற்கான தனது பத்து நாள் சுற்றுப்பயத்தினை மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயனா அங்கோலாவில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட அதே பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது மனிதாபிமான நடவடிக்கைகளிற்காக உலகின் பாரட்டுகளை பெற்ற இளவரசி டயனா கண்ணிவெடி ஒழிப்பிற்காக குரல்கொடுத்து வந்ததுடன் 22 வருடங்களிற்கு அங்கோலாவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள குவாம்போ நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கோலாவின் 27 வருட யுத்தத்தில் மிகக்கடுமையான மோதல் இடம்பெற்ற அந்த நகரம் நிலக்கண்ணிவெடிகள் நிறைந்ததாக காணப்பட்டது. டயான தற்பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு ...

Read More »

இராவணா 1 செய்மதியை தாயாரித்த விஞ்ஞானி சிறிலங்கா வருகை

இராவணா 1 செய்மதியை தாயாரித்து ஏவிய சிறிலங்கா விஞ்ஞானி நேற்று இரவு கொங்கோ நாட்டலிருந்து கட்டு நாயக்க விமானத்தை வந்தடைந்தார். தரிது தயாரட்ண என்ற  விஞ்ஞானியே கொங்கொங்கோவிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தடைந்தார். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது நிறுவனத்தின் அனுமதியின்றி பதிலளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் செயற்திட்டதிற்கு அமைவாக  நான் இலங்கைக்காக விண்கலத்தை தயாரித்தேன் என தெரிவித்தார். எனக்கு அதித மகிழ்ச்சி வானத்தை பார்க்கும் போது நாங்கள் தயாரித்த விண்கலம் பூமியை சுற்றி வருகிறது. நாங்கள் இன்னும் ஐந்து ...

Read More »