லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம்!

பிரித்தானிய விமானப் பொறியியலாளர்களினால் உருவாக்கப்படுகின்ற புதிய hypersonic-விமான இயந்திர தொழில்நுட்பத்தின் உதவியுடன் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“Synergetic Air Breathing Rocket Engine என்ற இந்தப்புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய அதிவேக பறப்பு இயந்திரத்தினை விமானங்களில் பொருத்துவதன் மூலம் பாரம்பரிய பறப்பு இயந்திரங்களைவிட பலமடங்கு வேகத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Reaction Engines நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்த சோதனைகள் நிறைவடைந்தவுடன் எதிர்வரும் 2030ம் ஆண்டு பயணிகள் விமானங்களில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய தொழினுட்பத்தின் மூலம் லண்டனுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையிலான பறப்பு நேரம் வெறும் ஒரு மணி நேரமாக குறைவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.