இராவணா 1 செய்மதியை தாயாரித்து ஏவிய சிறிலங்கா விஞ்ஞானி நேற்று இரவு கொங்கோ நாட்டலிருந்து கட்டு நாயக்க விமானத்தை வந்தடைந்தார்.
தரிது தயாரட்ண என்ற விஞ்ஞானியே கொங்கொங்கோவிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தடைந்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது நிறுவனத்தின் அனுமதியின்றி பதிலளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் செயற்திட்டதிற்கு அமைவாக நான் இலங்கைக்காக விண்கலத்தை தயாரித்தேன் என தெரிவித்தார்.
எனக்கு அதித மகிழ்ச்சி வானத்தை பார்க்கும் போது நாங்கள் தயாரித்த விண்கலம் பூமியை சுற்றி வருகிறது. நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் விண்கலத்தை உருவாக்கி விண்ணுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம்.
விஞ்ஞானி தரிது தயாரட்ணவை வரவேற்பதற்காக தாய், சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவர் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர், மாணவர்கள் சங்கம் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal