டயனா கண்ணிவெடிகள் ஊடாக நடந்த பகுதியில் இளவரசர் ஹரியும் நடந்தார்!

ஆபிரிக்க நாடுகளிற்கான தனது பத்து நாள் சுற்றுப்பயத்தினை மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயனா அங்கோலாவில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட அதே பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தனது மனிதாபிமான நடவடிக்கைகளிற்காக உலகின் பாரட்டுகளை பெற்ற இளவரசி டயனா கண்ணிவெடி ஒழிப்பிற்காக குரல்கொடுத்து வந்ததுடன் 22 வருடங்களிற்கு அங்கோலாவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள குவாம்போ நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அங்கோலாவின் 27 வருட யுத்தத்தில் மிகக்கடுமையான மோதல் இடம்பெற்ற அந்த நகரம் நிலக்கண்ணிவெடிகள் நிறைந்ததாக காணப்பட்டது.

டயான தற்பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதி ஊடாக நடந்து செல்வதையும்,நிலக்கண்ணிவெடியினால் அவயங்களை இழந்த பிள்ளையொன்றுடன் உரையாடுவதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலகின் மனச்சாட்சியை தொட்டிருந்தன.

இதன் பின்னர் நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கவேண்டும் என்ற  குரல்கள் தீவிரமடைந்தன.

நிலக்கண்ணிவெடிகளை ஒழிப்பதற்கான சர்வதேச பிரகடனத்தில் உலக நாடுகள் கைச்சாத்திடுவதற்கு சில மாதங்களிற்கு முன்னர் டயனா விபத்தில் பலியானார்.

இந்நிலையில் டயான விஜயம்;மேற்கொண்ட அந்த பகுதிக்கு இளவரசர் ஹரி சென்றுள்ளார்.

இந்த விஜயத்திற்கு முன்னதாக இன்ஸ்டகிராமில் டயானவின் படமொன்றை பதிவு செய்துள்ள  ஹரியும் அவரது மனைவியும்  கண்ணிவெடிகளை சர்வதேச சமூகம் தடை செய்யும் நிலையேற்பட்டால் இந்த தலைமுறையின் பேரப்பிள்ளைகளிற்கு  உலகம் பாதுகாப்பானதாக விளங்கும் என டயனா தெரிவித்ததையும் பதிவி;ட்டுள்ளனர்.

22 வருடங்களிற்கு முன்னர் டயனா சென்ற அதேபகுதிக்கு  இளவரசர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவல் எனக்கு ஆச்சரியமளித்துள்ளது என டயனா அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை குறிப்பிட்ட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.

ஹரி டயான விஜயம் செய்த எலும்பியல் மையத்திற்கும் செல்லவுள்ளார்.