யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் சிறிலங்கா காவல் துறை மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளளதுடன், சம்பவத்தில் 2 காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய்காவல் துறை இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த நபரைத் தேடிய போது, பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த முரண்பாடு ...
Read More »செய்திமுரசு
உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், ...
Read More »சம்பந்தன் ஐயாவின் இராஜதந்திர நம்பிக்கை இன்னமும் காலம் கடந்துவிடவில்லையாம்!
தமிழரசுக் கட்சியால் தமிழருக்கான உரிமையை வென்றெடுக்க முடியும் என்பது செல்வாவின் நம்பிக்கையாக இருந்தது! விடுதலைப் போராட்டத்தால் தனி ஈழம் அமைக்க முடியும் என்பது பிரபாகரனது நம்பிக்கையாக இருந்தது! இராஜதந்திரத்தால் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இரா.சம்பந்தன் ஐயாவின் நம்பிக்கையாக இருந்தது. தற்போதைய தேர்தல் முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்காலிக பின்னடைவே அன்றி நிரந்தர பின்னடைவு இல்லை என, இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு ...
Read More »மக்களுடன் இணைந்து நின்று பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவேன்
நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ் மக்கள் மீது கடந்தகால தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என்பதை அம்பாறை தமிழ்மக்களின் வாக்குகள் கட்டியம் கூறி நிற்கின்றன. நிச்சயமாக கூட்டமைப்பு வடகிழக்கில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது, கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களை விட 2020, தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த அடிப்படையில் முற்று முழுதாக நாங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்பட்டோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் மக்கள் மத்தியில் ...
Read More »ஆஸ்திரேலியாவின் இறைமை நடவடிக்கை என்னென்ன?
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம், கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன. இவை Regional Processing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் தொழில்துறை நகரம்!
அவுஸ்திரேலியாவில் பரபரப்பாக இயங்கும் தொழில்துறை நகரம் ஒன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புகளுக்கு அருகாமையில் இந்த ரசாயன கிடங்கு அமைந்துள்ளதால், பெய்ரூட் போன்ற பயங்கரமான வெடிவிபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இங்குள்ள மக்கள் உள்ளனர். லெபனானில் செவ்வாய்க்கிழமை 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்துள்ளனர், மேலும் 5,000 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். அதே சூழல் அவுஸ்திரேலியாவின் பரபரப்பாக இயங்கும் தொழில்துறை நரகம் ஒன்றிலும் தற்போது உருவாகியுள்ளது. சிட்னியின் ...
Read More »19ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்கிறார் சுரேன் ராகவன்
அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் தெரிவித்த, வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், இந்த 19ஆம் திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்றார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று நேரடியாக கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 19ஆம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல ...
Read More »நடுக்கடலில் வைத்து சிறுவனை துன்புறுத்திய மூவர் கைது
மீ ன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஸ்ஸவில் வசிக்கும் 16 வயதுடைய மேற்படி சிறுவன், சில வாரங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ மீன்வள துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, ஆகஸ்ட் 12 ஆம் திகதி கரைக்குத் திரும்பினார். வீடு திரும்பியதும் அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, அந்த இளைஞன் தான் மீன்பிடி குழுவினரால் தாக்கப்பட்டதை வெளிப்படுத்தினான் சிறுவன் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை ...
Read More »யாழில் இராணுவத்தினரால் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விவரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னாள் போராளிகளின் விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளமை முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Read More »திரிசங்கு நிலையில் சுமந்திரன்
சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது, சரியான முறையிலும் எடுக்க வேண்டும். இது, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானது. பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தோன்றிய சர்ச்சைகள் மாத்திரமன்றி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கும் கூட, இது பொருத்தமுடையது தான். அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிட்டு வாக்குகளை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal