யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் சிறிலங்கா காவல் துறை மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளளதுடன், சம்பவத்தில் 2 காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய்காவல் துறை இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அந்த நபரைத் தேடிய போது, பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த முரண்பாடு தொடர்பாக விசாரணை செய்ய சென்ற காவல் துறை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Eelamurasu Australia Online News Portal