செய்திமுரசு

குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் – உலக தலைவர்கள் கடும் கண்­டம்!

இலங்­கையில்  ஆல­யங்கள் மற்றும்  ஹோட்­டல்­களில் நேற்று இடம்­பெற்ற  குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள்  தொடர்பில் உலக தலை­வர்கள் கடும் கண்­ட­னத்தை வெளியிட்­டுள்­ளனர்.  அமெ­ரிக்கா, இந்­தியா, பிரித்­தா­னியா, துருக்கி, பாகிஸ்தான் உள்­ளிட்ட நாடு­களின் தலை­வர்கள் இவ்­வாறு கண்­டனம்  வெளியிட்­டுள்­ளனர். பிரித்­தா­னியா  பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்­கத்தில்  தெரி­வித்­துள்­ள­தா­வது, இலங்­கை­யி­லுள்ள தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை நட­வ­டிக்­கைகள் உண்­மை­யி­லேயே பயங்­க­ர­மா­னவை. இந்த துய­ர­மான நேரத்தில் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் என் ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். இந்­நே­ரத்தில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நம்­பிக்­கையை இழக்­காமல் செயற்­ப­ட­வேண்­டுயம் என்றும் அவர் ...

Read More »

சர்வதேச காவல் துறை உதவியை கோருகின்றோம்!

மோசமான  தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச காவல் துறை உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்தக் கருத்துக்களை ...

Read More »

இலங்கை குண்டுவெடிப்பு! 200ஐ தாண்டியது உயிரிழப்பு – 7 பேர் கைது!

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 450 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இதில் நீர்கொழும்பிலேயே அதிகபட்ச உயிரிழப்பாக 104 பதிவாகியுள்ளது. 6 குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாத்திரமே உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார். கொழும்பில் 66 பேர் உயிரிழந்ததோடு, 260 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் 104 பேர் ...

Read More »

தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வாகனம் சிக்கியது!

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வான் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று காவல் துறையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் கொல்லப்பட்ட நிலையில் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புக்கு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று காவல் துறையால்  மீட்கப்பட்டுள்ளது. குறித்த வான் வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் சாரதியையும் காவல் துறையினர் கைது ...

Read More »

மட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனிதத்தலை!

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் மனிதத் தலையயொன்று கிடைத்துள்ளது. இந்நிலையில், குறித்த மனித தலை யாருடையது என்பது குறித்து விசேட அதிரடிப்படையினரும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போது குண்டு வெடிப்பு இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு ...

Read More »

கொழும்பில் 32 வெளிநாட்டவர்கள் பலி!

கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தாக்குதலை நடத்தியவர் இவரா?

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த நபரே தனது பையில்கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் குறித்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக காவல் தறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிக்கு சரமாரி கத்திக்குத்து!

தாய்லாந்தில் இளம்பெண்ணின் ஆடையை களைய முயன்றவரிடம் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 43 வயதான வெய்ன் மார்க்ஸ் என்பவர், தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று வெய்ன் மார்க்ஸ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் மதுக்கடை ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த சானி இன்ராராங் (30), நேரடியாக ஒரு பெண்ணிடம் சென்று மேலாடையை கழற்றி தருமாறு வற்புறுத்தியுள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், சிறிது நேரம் ...

Read More »

பத்தாவது மே பதினெட்டை எப்படி நினைவு கூரலாம்?

பத்தாவது மே பதினெட்டு இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடும். ஜெனீவாவை எப்படி தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் மே பதினெட்டை நினைவுகூரும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நினைவு கூர்தலை யார் ஏற்பாடு செய்வது? எப்படிச் செய்வது? என்பவை தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அவ்வாறு ஒரு பொது உடன்பாடு எட்டப்படாமைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம்- நினைவுகூர்தல் என்றால் என்ன என்பது தொடர்பில் ஓர் ஒருமித்த கருத்து ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இல்லை. இரண்டாவது காரணம்- ...

Read More »

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை!

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர். இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் ...

Read More »