செய்திமுரசு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. ...

Read More »

இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள்!

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த  எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த  முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களிற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஐடிஜேபியின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ...

Read More »

ரவிகரன் மற்றும் ஏழுபேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரமாகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது. ...

Read More »

கேரளத்தின் தைரியலட்சுமி!

கடலில் ஆர்ப்பரித்து எழுகின்றன அலைகள். பள்ளியில் படித்த அகடுகளும் முகடுகளும் போல நிலைகொள்ளாது ஏற்ற இறக்கமாக அலைபாய்கிறது கடல் மட்டம். வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க சுடிதார் துப்பட்டாவால் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு, கணவர் கார்த்திகேயனோடு கடலுக்குள் படகைத் தள்ளிச்சென்று துள்ளி ஏறுகிறார் ரேகா! இந்தியாவிலேயே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உரிமம் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கும் ரேகா சொந்தக்காரர். கேரள மாநிலம், திருச்சூரை அடுத்த சேட்வா பகுதிதான் இவரது பூர்வீகம். ஒரு பக்கம் தன்னுடைய நான்கு மகள்களைப் பொறுப்புடன் வளர்க்கிறார்; மறுபுறம் கடலோடிப் பெண்ணாகவும் ...

Read More »

தேர்தல் மேடைக்குத் தயாராகும் கூட்டமைப்பின் நவீன ‘டீல்’ நாடகம்

உயிரைக் காப்பாற்றவே விடுதலைப் புலிகளுடன் அன்று டீல் செய்ய நேர்ந்தது என்று சுமந்திரனும் அவரது கையாள் சயந்தனும் சொல்வது உண்மையானால், முள்ளிவாய்க்காலின் பின்னர் அந்த டீலைக் கைவிட்டு, கூட்டமைப்பைக் கலைத்து, தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனித்து தேர்தலில் போட்டியிட இவர்கள் தயங்குவது ஏன்? அண்மையில் எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார். பொலிரிக்ஸ்  (Politics) என்பது லத்தீன் வார்த்தை என்றும், அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார். பொலி என்றால் பல என்று அர்த்தம். ரிக்ஸ் என்றால் இரத்தத்தை உறிஞ்சும் உயிரினம் ...

Read More »

பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள பழங்கால இந்து மத தலமான ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அறிவித்த கைபர் பக்துன்குவா மாகாண அரசுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்துக்கள் திருமணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இந்துக்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வதுடன், விவாகரத்துக்காக கோர்ட்டை அணுகலாம்.

Read More »

சிட்னி டெஸ்ட்: கடைசி நாள் முழுவதும் நின்று தோல்வியை தவிர்க்குமா ஆஸ்திரேலியா?

சிட்னி டெஸ்டில் கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால் நெருக்கடியில் உள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. ...

Read More »

ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி வட மாகாண பெண்களுடன் சந்திப்பு

ஈழத் தமிழரான  நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர்  கம்சாயினி குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இலங்கை கொள்கைகளுக்கான பேரவையின் ( Centre for Public Policies) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் ...

Read More »

சுமந்திரனின் கனவும் ஒருபோதும் நிறைவேறாது! – சேஹான் சேமசிங்க

புதிய அரசியலமைப்பின் வரைபை மட்டுமல்ல அதன் யோசனைகளையும் கடுமையாக எதிர்ப்போம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க, நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று வடக்கு மக்களால் வெறுக்கப்பட்டவராக சித்தரிக்கப்படுகின்றார். எனவே அவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் புதிய அரசியலமைப்பினை கோரும்  கூட்டமைப்பினர்   வடக்கு கிழக்கு உட்பட  நாட்டில் வாழும்  தமிழ்  மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு   தீர்வு காண இதுரையில் தமது எதிர்கட்சி பதவியை பயன்படுத்தவில்லை. வடக்கு மக்களும் புதிய அரசியலமைப்பை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய வானம்!

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரத்தில் வானம், ஆரஞ்சும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் டாஸ்மேனியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் புகைப் படலம் ஹோபார்ட் நகரத்தைச் சூழ்ந்தது. காட்டுத்தீ ஏற்பட்ட இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் ஹோபார்ட் அமைந்துள்ளது. எனினும் தீயின் புகை பரவி ஹோபார்ட்டையும் பாதித்தது. ஹோபார்ட் நகரவாசிகள், வானத்தைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். காட்டுத்தீ, ஹோபார்ட் நகரத்திற்குப் பரவாது என்றாலும் மூச்சுத்திணறல் நோய்களுடையவர்கள் புகையால் பாதிப்படையலாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். தீயின் காரணமாக யாருக்கும் காயங்கள் ...

Read More »