பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள பழங்கால இந்து மத தலமான ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அறிவித்த கைபர் பக்துன்குவா மாகாண அரசுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்துக்கள் திருமணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இந்துக்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வதுடன், விவாகரத்துக்காக கோர்ட்டை அணுகலாம்.
Eelamurasu Australia Online News Portal