ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...
Read More »செய்திமுரசு
அரிசி மலை இரகசியம்
கிழக்கு மாகாணம் இயற்கை வளங்களால் அழகு பெறும் ஒரு மாகாணம். அதில் திருகோணமலை மாவட்டமும் இயற்கையினை மேலும் அழகு பெறச் செய்கிறது. சுற்றுலாத் தளங்களின் ஒரு பகுதியாக புல்மோட்டை அரிசி மலை காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பகுதியே அரிசிமலை பகுதி. பபளபளப்பான அரிசி போன்ற கற்கள் நிறைந்த இலங்கையின் விசித்திரமான கடற்கரை பிரதேசமாக இது விளங்குகிறது. திருகோணமலை நகர் பகுதியில் இருந்து சுமார் 56 கிலோ மீற்றர் தொலைவில் இவ் அரிசி மலை பிரதேசம் காணப்படுவதுடன், புல்மோட்டை ...
Read More »‘கொரோனாவில் அரசியல் வேண்டாம்’ – சி.வி வலியுறுத்தல்
கொரோனாவைக் காரணம் காட்டி, அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்கால கொரோனா நிலைவரம் தொடர்பில், இன்று (15) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போது மிகவும் ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தினசரி 100 – 150 வரை உயிரிழப்புக்கள் இலங்கையில் ஏற்படுகின்றது. எனவே இலங்கையிலுள்ள சகல மொழிபேசும், சகல மதஞ் சார்ந்த எல்லோரும் கொரோனாவின் ...
Read More »அத்தியாவசியப் பொருள்களை சேமித்து கொள்க
கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மிக பொறுப்புடன் நடந்துகொள்ளவும். தேவையான அத்தியாவசிய பொருள்களை சேமித்துகொண்டு வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கவும். “கூடியவகையில் சுயக்கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வீடுகளைவிட்டு வெளியேறாமல் இருப்பது சகலரும் நல்லது” என்றார். அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் தீர்மானம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த அவர், கேக் துண்டுகளை சாப்பிட்டுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இது தீர்மானங்களை எடுக்காமல் மக்கள் படும் துன்பங்களை பார்த்து ...
Read More »சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன – இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »சிட்னி வாழ் தனி நபர்களும் தனிமைப்படுத்தல் விதிகளும்
சிட்னி பெரு நகரில் தனியாக வாழ்பவர்கள் விருந்தாளி ஒருவரை மட்டும் வீட்டிற்கு வர அனுமதிக்க முடியும். ஜூலை 31ஆம் தேதி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடு, தனியாக வாழும் ஒருவர் தன்னைப் பார்க்க வருவதற்காக ஒருவர் பெயரைப் பரிந்துரைக்க முடியும். அவர் குடும்ப அங்கத்தவராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். ஆனால், பரிந்துரைத்து அனுமதி பெற்ற பின்னர், அவரை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் முடக்க நிலையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்திருப்பதாக NSW மாநில அரசு ...
Read More »சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த நபர் கைது!
சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொவிட் தடுப்பூசி செலுத்தும் போது வழங்கப்படும் அட்டையை தயாரிப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர் மொரட்டுவ காவல்நிலையத்தில ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா?
ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை என்பதை தமிழ் மக்கள் கடந்த கால அனுபவங்களால் நன்றாகவே கற்றுக் கொண்டுள்ளனர். அடுத்த மாத அமர்வுக்கு முன்னர் எதற்காக இந்த அவசர சந்திப்புகள்? சர்வதேசத்தை எத்திப் பிழைக்க தமிழரைக் கட்டியணைக்கும் அதே நாடகம்தானா? இலங்கை இப்போது இருமுனைப் போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவது உயிரியலுடன் சம்பந்தப்பட்ட கொரோனாப் பரவல். அடுத்தது, அரசியலுடன் தொடர்புடைய ஜெனிவா நெருக்கடி. இவையிரண்டுமே ...
Read More »இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது !
இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம். கேள்வி? இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா? பதில்! ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய ...
Read More »‘பாலியல் தொழில் குற்றமல்ல’- விக்டோரியாவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது!
பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal