செய்திமுரசு

அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை!

அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்வதை வடகொரியா நிறுத்தி வைத்தது. எனினும் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் வகையில் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்!

பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல்  (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக  தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார். தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது கிறிக்கெட்பயிற்றுவிப்பாளரால் தன்னையும் அழைத்து வியையாடச் செய்தமையால் கிறிக்கெட்டில் பங்கேற்கும் சந்தர்பம்  ஏற்பட்டது என்றார். ...

Read More »

தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன?

மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கின்ற நிலையில், அந்த இடத்தை இம்முறை பிரித்தானியா நிரப்பவுள்ளது. அது எவ்வாறான பிரேரணையாக அமைந்திருக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி? 2015 செப்டம்பரில் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ...

Read More »

ஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா?

நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும்  எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூறுவதுதான். இவ்வாறு நிலைமாறுகால நீதியை இலங்கைத்தீவில் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு 2015செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! சொத்துக்கள் பல சேதம்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேலும் அழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அந்நாட்டு அவசரகால சேவைகள் மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தென்கிழக்கு மெல்போர்ன் பகுதியில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டேட் பார்க் பகுதியில் பாரிய தீப்பரவல் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விக்டோரியா மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவல் ...

Read More »

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் கோத்தபாய ….!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் நான் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தேன். எனினும் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை மஹிந்த ...

Read More »

பின்லேடன் மகன் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஐ.நா!

சவுதி அரேபிய அரசு குடியுரிமையை ரத்து செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக்குழு பின்லேடன் மகன் ஹம்ஸா பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் அமெரிக்கா மீதும், அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவேன் என அவரது இளைய மகன் ஹம்ஸா பின்லேடன் 2015-ம் ஆண்டில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஹம்ஸா ...

Read More »

யாழில் எழுச்சி கொண்ட பெண்கள்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நலலூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் முன்னியப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரிகை இசை முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட நிலையில் ...

Read More »

போராட்டத்தை குழப்ப முயன்றமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரினார் சிறிதரன்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கிளிநொச்சி போராட்டத்தில் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பொலிசில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இம்முறைப்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அவசர அவசரமாக ஊடகவியலாளர்களை சந்தித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குழப்பங்களிற்கு பொது மன்னிப்பு கோரியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய கவனயீா்ப்பு போராட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினா்கள் சிலா் குழுப்பம் விளைவித்தமை உண்மையே, என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், அவ்வாறு குழப்பம் விளைவித்தவா்களுக்கான தாம் ஊடகவியலாளா்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கூறியிருக்கின்றாா். கடந்த 28ம் திகதி ...

Read More »

தவறிழைத்த ஒவ்வொருவரையும் பொறுப்புக்கூற வைப்பதே சட்டத்தின் ஆட்சியாகும்!

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்த்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் போரின் முடிவுக்குப் பின்னரான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் அதன் கவனத்தை மீண்டும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் சர்வதேச சமூகத்தின் அக்கறைக்குரியவையாகும்.   விடுதலை புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற  மனித உரிமை மீறல்கள் உட்பட பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் மனித உரிமைகள் பேரவையின் 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறுவது குறித்து ...

Read More »