செய்திமுரசு

கோடை வெயிலின் தாக்கம் கொரோனாவை கட்டுப்படுத்துமா?

கோடை வெயிலின் அதிகரிப்பால் கொரோனா வைரஸ் கட்டுப்படுமா? என்ற கேள்விக்கு விடை காண்போம்.கடந்த காலங்களில் உலகில் பல நாடுகளில் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்கள் தாக்கியபோது இந்தியாவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு இந்தியாவில் நிலவிய வெப்பம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இங்கு அதிக வெப்பநிலை நிலவியதால் அந்த கிருமிகளால் தாக்குபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதேபோல தற்போது பரவி வரும் கொரோனா வைரசும் வெப்பநிலையை தாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர். தற்போது ...

Read More »

படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் – சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு

படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுகின்றது- சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு கொரோனாவைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகமாக காணப்படுவது சிங்கப்பூர் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தரைகளையும் கழிவறைகளையும் சுத்தம் செய்வதற்கு வழமையாக பயன்படுத்தும் தொற்றுநோய் நீக்கிகள் மூலம் நாளொன்றிற்கு இரண்டு தடவை சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ்களை அழிக்கலாம் எனவும் சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. சீனாவில் நோயாளிகள் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் மூலம் நோய் கிருமிகள் அதிகளவில் பரவியதை தொடர்ந்து இது ...

Read More »

கொரோனா வைரஸ் – பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா அச்சம்!

கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த பல வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் அவசரகால திட்டங்களை உருவாக்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் நிலை குறித்து அவுஸ்திரேலியா கவலையடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை அவுஸ்திரேலிய மக்களை வழமை போன்று நடந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நீங்கள் கடைக்கு செல்லும்போது முகக்கவசத்தை ...

Read More »

ஒரு வாரமாக முகத்தை தொடாத ட்ரம்ப்!

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது முகத்தை ஒருவாரமாக தொடவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் கலிப்போர்னியா போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் அமெரிக்கா 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க சுகாதாரத் துறை தீவிரமாக இறங்கி உள்ளது. கரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதால் அதன் பரவலை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டமும் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை ...

Read More »

விடுதலையை கோரி அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்ற ஈழத்தமிழ் மாணவி!

நீண்டகால தடுப்புமுகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், ஆண்டு 12 இல் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவியே அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ளார். பத்து ஆண்டுகளாக தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த தமிழ் அகதிகள் இருவரும், மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையான வாழ்வுக்குள் சிக்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது. மெல்பேணில் உள்ள மைற்றா தடுப்புமுகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்புமுகாம் வாழ்வை முடிவுக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயலும் படகுகள்: எச்சரிக்கும் ஆஸ்திரேலியா

மேற்கு ஆஸ்திரேலியா கடல் பகுதி அருகே 8 வெளிநாட்டினருடன் சென்ற ஆட்கடத்தல் படகு இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த 8 பேரையும் சட்டவிரோத குடியேறிகளாக ஆஸ்திரேலிய அரசு சந்தேகிக்கும் நிலையில், இவர்கள் சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின்றது. இதன் மூலம், 2013ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் கீழ் திருப்பி அனுப்பப்பட்ட 38வது ஆட்கடத்தல் படகு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆட்கடத்தல் தடுப்பதற்கான தேவையையும் கடலில் மக்கள் தங்கள் உயிரை பணயம் ...

Read More »

சிட்னியில் அரங்கேறிய புகழேந்தி நாடகம்!

29.02 2020 அன்று சிட்னிவாழ் இளைஞர்களினால் நடாத்தப்பட்ட “புகழேந்தி” என்ற தமிழ் இலக்கிய நடையிலான, ஏறக்குறைய அறுபது பேருக்குமேல் பாங்குபற்றிய, ஒரு வரலாற்று மேடை நாடகத்தை கண்டுகளித்தேன். கண்டேன், களித்தேன், சிரித்தேன் அழுதேன் ஆனந்தமடைந்தேன். எமக்கென்றோரு வலுவான தளம் இல்லையே என்ற கவைலையோடும் அக்கறையோடும் திரைத்துறையில் பயணிக்க முயன்ற, ஆரம்பித்த எனக்கு, இதுவரை பயணம் செய்து பெரியதொரு வெற்றியடையாமல், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் வலுவான தளத்தை உருவாக்க முடியாமல் மறைந்த பலர்போல் எனது முயற்சியும் வாழ்க்கையும் முடிந்து விடுமோ என்ற ஐயத்தோடு இருந்த ...

Read More »

அவுஸ்திரேலிய இளம் பெண்ணின் தோளில் இருந்த மச்சத்தில் ஏற்பட்ட மாற்றம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் உடலில் மச்சம் போன்ற மருவு ஏற்பட்ட மாற்றத்தை அவர் சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் ஸ்கேன் பரிசோனையில் அது தோல் புற்றுநோய் என்பது தெரியவந்ததால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். Courtney Mangan (33) என்ற பெண்ணுக்கு தோள் பகுதியில் மச்சம் போன்ற மருவு சிறுவயதிலிருந்தே இருந்தது. அவருக்கு 30 வயதான போது அந்த மருவில் மாற்றம் ஏற்படுவதை Courtney உணர்ந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் பின்னர் அரிப்பும் வலியும் அந்த பகுதியை சுற்றி ஏற்பட்டதால் மருத்துவமனையை நாடினார். அங்கு ...

Read More »

பழசைக் கிளறிக் கிளறி புதிதாக்குதல்!

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில், புலம்பெயர்ந்து கனடா நோக்கிச் செல்லும் தமிழ் மக்களது எண்ணிக்கை, சடுதியாக அதிகரித்தது. இவ்வாறு, வேறு பல நாடுகளிலிருந்தும் கனடா நோக்கி, இடம்பெயர்ந்து மக்கள் சென்றார்கள். இவ்வாறு செல்லும் குடியேற்றவாசிகளை, அங்கு சிறையில் அடைத்து வைப்பார்கள். பிறநாட்டு அகதிகள் தங்கியிருந்த அறை, அவர்கள் வெளியே செல்லாதவாறு, பூட்டுகள் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும்.  ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குக் கதவே கிடையாது. இந்நிலையில், ஒரு நாள் சிறைச்சாலையைப் பார்வையிட, அந்நாட்டு அரச உயர் அதிகாரி ...

Read More »

தேர்தலில் பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது – அஸ்கிரிய மகாநாயக்கர்!

பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார். அஸ்கிரிய மகா விகாரைக்கு நேற்று(செவ்வாய்கிழமை) சென்றிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ‘இலங்கையின் தேர்தல் சட்டம் பழமையானது என்பதால், அவசரமாக அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பௌத்த பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது. பௌத்த மதகுருமார் அரசியல் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டால், ...

Read More »