செய்திமுரசு

திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்!

மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். சோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும், 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார். மேலும் இவர் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு ...

Read More »

சவேந்திர சில்வாவின் நியமனம்! உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்!- அமெரிக்கா

யுத்த குற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவரை இலங்கை இராணுவதளபதியாக நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவினை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துகொள்ளவேண்டியநிலையேற்படலாம் என  அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மனித உரிமை தொழிலாளர் பணியகத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஏ டெஸ்டிரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் விசாரணை குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்ற ஒரு தருணத்தில் சவேந்திரசில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் இலங்கையின்  அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ...

Read More »

கூடுகிறது கூட்டமைப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பினை அடுத்து 13 அம்சக் கோரி க்கைகளை முன்னிறுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும்  பேச்சு வார்த்தை நடத்த பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானம் எடுத்துள்ளன. அதன்படி இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் வெள்ளிக்கிழமைமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன்  இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. வடக்கு கிழக்கை  பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து ...

Read More »

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்!

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 16 வயது நசீம் ஷா உள்பட மூன்று இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டன. டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் கிடைத்துள்ளது. இவருடன் 19 வயதான ஷாஹீன் அப்ரிடி, முசா கான் ஆகியோரும் அணியில் இடம் ...

Read More »

யாழில் நாளை மறியல் போராட்டம்?

யாழ்.மாவட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை விடுதலை செய்யக்கோாி யாழ்.மாவட்ட மீனவா்களால் முன்வைக்கப்பட்ட சகல கோாிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை புதன் கிழமை யாழ்.இந்தி ய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு தீா்மானித்துள்ளோம். மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சங்கங்களின் சம்மேளன தலைவா் வே.தவச்செல்வம் கூறியுள்ளாா். குறி த்த விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெ ரி விக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும்  அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 ...

Read More »

இங்கிலாந்தில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் பலி!

இங்கிலாந்தில் விருந்துபசாரமொன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.   இச் சம்பவத்தில் 17 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இளைஞர்கள் மீது ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி!

எஸ்பிஎஸ் நியுஸ் தமிழில்- ரஜீபன் அவர் வழமைக்குமாறான பயணிகள் கனமான முதுகுப்பொதிகளுடன் அங்குமிங்கும் நடமாடித்திரிவதை பார்த்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பின் சங்கிரிலா ஹோட்டலின் டேபிள் ஒன் விடுதிக்குஅருகில்  அவர்கள் அவரை தள்ளிவிட்டு சென்றனர். நான் அவர்கள் பயங்கரவாதிகள் என  ஒருபோதும் நினைவிக்கவில்லை அவர்கள் முரட்டுத்தனமானவர்களாக காணப்பட்டனர் என தெரிவிக்கின்றார் ஹனேகே மனோகரன் பின்னர் வெளியான சிசிடிவி காட்சிகள் ஹனேகே மனோகரனிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரியொருவர் காணப்படுவதை காண்பித்துள்ளன. பெருமளவானவர்கள் காணப்பட்ட உணவகத்தை அவர்கள் உன்னிப்பாக நோக்கினார்கள் அங்கு அனேகமாக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே ...

Read More »

சிலியில் போராட்டம்: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!

மத்திய அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800 முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க சாண்டியாகோ மற்றும் சாகபுகோ மாகாணங்களிலும், புவென்ட் ...

Read More »

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீராவியடி ஆலயத்திற்கு அருகில் தேரர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்பிலேயே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரையும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கோத்­த­பா­யவின் ஆட்சி இடம்பெறுமாயின் சிறு­பான்­மை­யினர் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாது!

கோத்­த­பா­யவின் ஆட்சி இடம்­பெ­று­மாயின்  சிறு­பான்­மை­யினர் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாது என்­ப­துதான் முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த முடி­வாகும் என கிழக்கு மாகாண முன்னாள்  முத­ல­மைச்சர்  நஸீர் அஹமட் தெரி­வித்தார். ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து  ஏறா­வூரில்   நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­றும்­போது, முஸ்­லிம்கள்  உயி­ருக்கு அஞ்சி வயற் காடு­க­ளுக்குள் மறைந்து வாழு­கின்ற ஒரு சமூ­க­மாக  இருக்க முடி­யாது. முஸ்­லிம்கள் தலை­நி­மிர்ந்து வாழ வேண்டும்.  ஜன­நா­ய­கத்­தையும்  அமை­தி­யையும் விரும்பும் பெரும்­பா­லான மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள். ...

Read More »