பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீராவியடி ஆலயத்திற்கு அருகில் தேரர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்பிலேயே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரையும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal