செய்திமுரசு

இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.   இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளமான 36 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.         ...

Read More »

லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய தலைவர்!

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக டாக்டர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இவருக்கான நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். டாக்டர் சரித ஹேரத் மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரும், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பிரதித் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறைத் தலைவரும், ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஆவார்.

Read More »

இலங்கை தமிழர் விவகாரம் ; இந்திய ஆங்கில தேசிய பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில்..!

இலங்­கையின் வடக்கு–கிழக்கு பகு­திகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ கொண்­டி­ருக்கும் மனப்­பாங்கு இந்­தி­யா­வினால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும் என்­கின்ற அதே­வேளை அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு மேலாக பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்ற அவ­ரது விருப்பம் புது­டில்­லிக்கும் சென்­னைக்கும் கவலை தரு­வ­தாக இருக்கும்.   மேலும்  தமிழர்  பிரச்­சினை  இரு­த­ரப்பு உற­வு­களை மீண்டும்  பாதிக்­கக்­கூ­டிய “ஒரு வெடி­குண்­டாக” தொடர்ந்­தி­ருக்கும் தமிழர் பிரச்­சி­னை­யிலும் ஏனைய விவ­கா­ரங்­க­ளிலும் இரு நாடு­களும் பொது­வான நிலைப்­பாட்டை கண்­ட­றிய வேண்­டி­யி­ருக்கும் என்றும் இந்­தி­யாவின்  முக்­கி­ய­மான ஆங்­கில தேசிய பத்­தி­ரி­கைகள் அவற்றின் ஆசி­ரிய தலை­யங்­கங்­களில்  குறிப்­பிட்­டுள்­ளன. ...

Read More »

ஈரானில் கடந்த வாரம் 2 இலட்சம் மக்கள் போராட்டம்!

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கடந்த வாரம் ஈரானில் 200,000 மக்கள் போராட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னணி சர்வதேச இணையத்தளமான ‘த கார்டியன்’ செய்தித் தளம் தெரிவித்துள்ளது. ஈரான் அரசாங்கம் எரிபொருள் விலையை மூன்று மடங்காக உயர்த்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. இதனால் இஸ்லாமிய குடியரசின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வன்னம் கலவரங்களும், போராட்டங்களும் ஈரானில் இடம்பெற்று வருகின்றன. ஈரானிய அதிகாரிகள் இந்த வாரம் 200,000 மக்கள் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டதாக மதிப்பிட்டுள்ளதுடன், 7,000 க்கும் மேற்பட்ட கைது சம்பவங்களும் ...

Read More »

இரு அர­சுகள் குறித்த பிரித்­தா­னிய கட்சியின் கருத்து! -சிறிலங்கா  அர­சாங்கம்

இலங்­கையில் இரு தேசம் ஒரு நாடு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற பிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்து தொடர்பில் சிறிலங்கா  அர­சாங்கம் அதன் கடு­மை­யான அதி­ருப்­தியை வெளிப்படுத்தி­யுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. பிரித்­தா­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தலை கொண்ட அவர்­களின் காய்­ந­கர்த்­தல்­களின் இலங்கை தலை­யிட தயா­ரில்லை எனவும் வெளி­வி­வ­கார செய­லாளர் அறி­வித்­துள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சின் செய­லாளர் ரவிநாத் ஆரி­ய­சிங்க இது குறித்து தெளி­வு­ப­டுத்­து­கையில் இலங்­கையில் இரண்டு இராச்­சியம் என்ற கருத்­துக்கள் இங்­கி­லாந்து கட்­சிகள் முன்­வைக்கும் கார­ணியில் நாம் அறிந்த ...

Read More »

கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்!

சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி என்ற அடிப்படையில்கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள விடுபாட்டுரிமையை வலியுறுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ...

Read More »

ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் பாகிஸ்தான் அங்கு 0-2 என்று ஒயிட்வாஷ் டெஸ்ட் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் வான் இந்தியா மட்டுமே ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக விராட் கோலி தலைமை இந்திய அணிக்கே இத்தகைய திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானை அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இன்னின்ங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் தங்கள் வெற்றி வாகையை 6-0 என்று உயர்த்தியுள்ளனர். ...

Read More »

கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சி! இளைஞர்கள் கைது!

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க காவல் ...

Read More »

அவுஸ்திரேலிய பேராசிரியர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா!

உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கும் SLIIT தனது 21ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழாவை அண்மையில் மாலபேயில் அமைந்துள்ள SLIIT கம்பஸில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது தமது உயர் கல்வியை பூர்த்தி செய்த 370 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் கலந்து கொண்டார், சிறப்பு அதிதியாக அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் பயிலல் பிரிவின் பீடாதிபதி இணை பேராசிரியர் கிறிஸ் ரோசன் கலந்து கொண்டார். டேவிட் மெக்கினன் தமது உரையில், ...

Read More »

மலையக அரசியலில் தொடரும் பழிவாங்கும் படலம்!

ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்­குப்­பின்னர் இடைக்­கால அர­சாங்கம் அமைக்­கப்­பட்ட பிறகு பாரா­ளு­மன்றத் தேர்தல் காலம் வரை , மலை­யக சமூ­கத்­துக்குக் கிடைத்­துள்ள அமைச்சுப் பத­வியைக் கொண்டு இம்­மக்­க­ளுக்கு ஏதா­வது நல்ல விட­யங்கள்  முன்னெடுக்­கப்­படல் வேண்டும் என்­பது அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. ஆனால் இங்கு நடப்­பதோ வேறு.   தனி வீட­மைப்­புத்­திட்­டத்தில் ஊழல்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாகவும் அது குறித்த விசா­ர­ணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆறு­முகன் கூறு­கிறார். அது மட்­டு­மன்றி,  அது தொடர்­பான கணக்­காய்வு விப­ரங்­க­ளையும் கேட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இ.தொ.கா இப்­படி நடந்து கொள்­வது  இது முதல் தட­வை­யல்ல. ...

Read More »