செய்திமுரசு

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்!

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும்  நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. ஹொங்கொங்கில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக ஆதரவுச் சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஹொங்கொங்  நெருக்கடியில்  கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துவருகின்ற  அணுகுமுறைக்கான அதிர்ச்சிதரும் வகையிலான ஒரு கண்டனமாக அமைந்தது ; மொத்தம் 18 மாவட்ட சபைகளில் 17 சபைகள் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. அந்த தேர்தலில் முன்னென்றுமில்லாத அளவுக்கு வாக்காளர்கள் பெருமளவில் ( 71 சதவீதத்துக்கும் அதிகம்  ) கலந்தகொண்டனர். ...

Read More »

மிட்செல் ஸ்டார்க் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 166 ரன்னில் சுருண்டது!

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ...

Read More »

உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம்!

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா  தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  கிரெட்டா தன்பேர்க்கினை  கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கான விஜயத்தின் பின்னர் இந்த செய்தியை பதிவு செய்துள்ள அவர் வியட்நாமில் நான் சந்தித்த யுவதிகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்,என குறிப்பிட்டுள்ள ...

Read More »

அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கை!

இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான  நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்வோம்  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை  இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம்  முழுமையாக விலகுவதற்கு  இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவா விவகாரம் மற்றும் இலங்கை குறித்த  ஐ.நா. பிரேரணையை  மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை  தொடர்பாக கருத்து வெ ...

Read More »

யாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா கொடை வழங்கும் இந்­தியா!

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக இந்­திய அர­சாங்கம் உறுதி அளித்­துள்­ளது. கைத்­தொழில் ஏற்­று­மதி, முத­லீட்டு ஊக்­கு­விப்பு, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க, அண்­மையில் இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்­து­வுடன் நடத்­திய சந்­திப்பின் போதே இந்த உறு­தி­மொழி அளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்­திப்பு தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டுள்ள அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க, “பய­ணிகளுக்­கான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் பொதி­களை நகர்த்தும் பட்­டியை அமைப்­ப­தற்கும் இந்­தியா 300 மில்­லியன் ரூபா கொடையை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது. பிராந்­திய விமானப் போக்­கு­வ­ரத்­துக்­காக ...

Read More »

ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா பதிலடி!

காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டடிருந்தது. இதனைத் தொடர்ந்து ...

Read More »

பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை!

தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் ...

Read More »

ஊடகவியலாளரை காவல் துறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு !

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை காவல் துறை  விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் காவல் துறை  அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக  மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை  ஏறாவூர் காவல் துறை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த ...

Read More »

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயற்சி!

முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள்  நல்லிணக்க ஆணைக்குழுவின்  பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துவெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவி;த்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை  மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.   2002 பெப்ரவரி 27 ...

Read More »

நியூஸிலாந்தின் வைட் தீவிலிருந்து ஆறு சடலங்கள் மீட்பு!

நியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, வெடிப்பில் சிக்குண்ட 6 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் இன்றைய தினம் மீட்டெடுத்துள்ளனர்.   இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்து கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிமாலையானது மீண்டும் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள படையினர், மீட்பு பணிகளை முமமுரமாக ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த எரிமலை வெடிப்பின்போது அவுஸ்திரேலியாவைச் ...

Read More »