முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துவெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவி;த்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
2002 பெப்ரவரி 27 ம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியில் முடிவடைந்தது என விசாரணை செய்யுமாறு அந்த ஆணைக்குழுவிற்கு ஆணை வழங்கப்பட்டிருந்து,மேலும் இதன் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யுமாறும் இந்த ஆணைக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழு 18 மாத விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் 2011 நவம்பரில் தனது பரிந்துரைகளைமுன்வைத்திருந்தது.
Eelamurasu Australia Online News Portal