செய்திமுரசு

போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

உடல்நலக்குறைவால் அவதியுற்று வரும் போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இத்தாலியில் உள்ள ...

Read More »

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?

உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள இந்த வைரசால் இதுவரை 3,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போல வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ...

Read More »

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது !

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இதில் சீனாவில் மட்டும் 2,944 பேர் இறந்துள்ளதாக இந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் சிறிது குறைந்துள்ளது. அதேநேரம், உலகளவில் ...

Read More »

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கை பெண்!

இலங்கை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தாலியை வசித்து வரும் 46 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வௌியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த பெண் தற்போது பிராசியாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை எனவும் வௌியுறவு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கொவிட் 19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவராவார்.

Read More »

இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு!

மன்னாரில் இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ வெடி மருந்து மற்றும் அதற்கு பயண்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (02) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடி மருந்து மற்றும் குச்சுகள் மன்னார் காவல் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் பள்ளிமுனை கோந்தை பிட்டி கடற்கரையோர பகுதியில் இன்று (03) ...

Read More »

கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ?

முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காண்பித்தார்கள். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு பரவத்தொடங்கியது வைரஸ்!

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இதுவரை 40 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ; ஒருவர் உயிரிழந்துள்ளார் எனினும் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் பிரட் ஹசார்ட் இதனை உறுதி செய்துள்ளார். ஈரானிலிருந்து வருவபவர்களிற்கான தடை நடைமுறைக்கு வருவதற்கு முதல் நாள் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நபர் ஒருவர் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கைகுலுக்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் !

கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் கைகுலுக்கிக்கொள்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நான் எனது நாளாந்த நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களை கைகுலுக்கிக்கொள்வதை நிறுத்தி விட்டு முதுகில் மெதுவாக தட்டுமாறு கேட்டுள்ளார் கைகுலுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். முத்தமிடும்போது எச்சரிக்கையாகயிருங்கள் எனவும் நியுசவுத்வேல்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Read More »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 68 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை!

நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும். 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ...

Read More »

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும்!

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று (02) இரவு கலைக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதன்படி நேற்று (01) நள்ளிரவு நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதியால் எந்த வேளையிலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ...

Read More »