சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று (02) இரவு கலைக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அதன்படி நேற்று (01) நள்ளிரவு நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதியால் எந்த வேளையிலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து அந்த வருடத்தின் செப்டெம்பர் முதலாம் திகதி 8 ஆவது நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
அதேபோல் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள திகதியும் அறிவிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 தொடக்கம் 7 வாரங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதோடு அதற்கமைய இந்தமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அல்லது மே மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal