அவுஸ்ரேலியாவில் கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பி வாலிபர் குடிக்க தண்ணீர் இல்லாததால் 140 கி.மீ. வரை சிறுநீரை குடித்து நடந்து வந்தார். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் தாமஸ் மேசன் (21). டெக்னீசியன் ஆன இவர் தனது காரில் அவுஸ்ரேலியாவின் தெற்கு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் குறுக்கே ஒரு ஒட்டகம் திடீரென கடந்து சென்றது. எனவே அதன் மீது மோதாமல் இருக்க அவர் காரை திருப்பினார். அதையடுத்து அக்கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் அப்பகுதிஅவுஸ்ரேலியாவின் மிகவும் ...
Read More »செய்திமுரசு
போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும்! – இரா.சம்பந்தன்
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன என்பது உண்மை. அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் ...
Read More »பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு பெண்களின் கைகளில்!
பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு பெண்களின் கைகளில் ,அவுஸ்தரேலியாவின் 53-ஆவது பாதுகாப்புத் துறை அமைச்சரான மரைஸ் பெய்ன், பாதுகாப்புத் துறையை கவனித்துக்கொள்ளும் முதல் பெண் அமைச்சராவார். இந்திராவுக்குப் பிறகு நிர்மலா இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் நிர்மலா சீதாராமன். அவர் ஏற்கனவே வகித்து வந்த வர்த்தக துறை அமைச்சர் பதவியையும் கவனித்துக்கொள்வார். பாதுகாப்புத் துறைகளில் வழக்கமாக ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், பல நாடுகள் தங்களது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பெண்களிடம் ...
Read More »அவுஸ்ரேலியா – வங்காளதேசம் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!
அவுஸ்ரேலியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ...
Read More »பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது – வைகோ
“இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள “திரையுலகின் தவப்புதல்வன்” மற்றும் “இராமாயண ரகசியம்” ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வுரை ஒன்றை வைகோ ஆற்றியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ‘‘இராமாயணத்தில் இராவணன் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் ...
Read More »வங்காள தேசத்துக்கு பதிலடி கொடுக்குமா அவுஸ்ரேலியா?
வங்காளதேசத்துக்கு எதிராக நாளை 2-வது டெஸ்ட் போட்டியில் மோத இருக்கும் அவுஸ்ரேலியா, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அவுஸ்ரேலிய அணி வங்காள தேசத்துக்கு சென்று உள்ளது. மிர்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா 20 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்ட காஸ்வில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் அவுஸ்ரேலியா உள்ளது. மேலும் ...
Read More »குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 10 இடங்களின் பெயர்கள் மாற்றம்!
குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 10 இடங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்பு நிறமுடையவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் N***** என்ற சொல்லுடன் இந்த இடங்கள் உள்ளது. இதனால் அது ஒரு வகை இன துவேஷத்தை வெளிப்படுத்தி நிற்பதாகவும், இந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இப்பெயர்களை மாற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு தெரிவித்துள்ளது.
Read More »இசைப்பிரியா கைதான தகவல் – சரத் பொன்சேகா
படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராஜகிரியவிலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஜகத்ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளார்கள் என்ற ...
Read More »சீன அகதிகளை மீண்டும் சொந்த நாட்டிற்கே நாடு கடத்திய அவுஸ்ரேலியா!
படகு வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்த ஆறு சீனர்கள், மீண்டும் சீனாவுக்கே அவுஸ்ரேலிய அரசு நாடுகடத்தியது. அவுஸ்ரேலியாவின் மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்புக்கு இடையே ஆறு சீனர்களை கொண்ட படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் சாய்பாய் தீவைச் சென்றடைந்தது. இவர்கள் அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐந்து சீனர்கள் மீண்டும் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக பப்பு நியூ கினியாவை சேர்ந்த ஒருவரும், சீனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். குவின்ஸ்லாண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 2013 ஆம் ...
Read More »நான் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லை!- மகிந்த ராஜபக்ஷ
புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் நாள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இரா.சம்பந்தனுக்குமிடையில் அரசியலமைப்புத் தொடர்பாக முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்புத் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தனக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதெனவும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும், தமிழர்கள் இணைந்து வரக்கூடிய இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என தான் மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். இச்சந்திப்புத் தொடர்பாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal