வங்காளதேசத்துக்கு எதிராக நாளை 2-வது டெஸ்ட் போட்டியில் மோத இருக்கும் அவுஸ்ரேலியா, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அவுஸ்ரேலிய அணி வங்காள தேசத்துக்கு சென்று உள்ளது. மிர்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா 20 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்ட காஸ்வில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் அவுஸ்ரேலியா உள்ளது. மேலும் முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் கட்டாயத்திலும் இருக்கிறது.
இந்த போட்டியில் அவுஸ்ரேலியா தோற்றாலும் அல்லது டிரா ஆனாலும் தொடரை இழக்க நேரிடும் அப்படி தொடரை இழந்தால் அது அவுஸ்ரேலியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் முதல் டெஸ்டை போல 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று அல்லது டிரா செய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்காள தேசம் உள்ளது.