அவுஸ்ரேலியாவில் கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பி வாலிபர் குடிக்க தண்ணீர் இல்லாததால் 140 கி.மீ. வரை சிறுநீரை குடித்து நடந்து வந்தார்.
அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் தாமஸ் மேசன் (21). டெக்னீசியன் ஆன இவர் தனது காரில் அவுஸ்ரேலியாவின் தெற்கு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரின் குறுக்கே ஒரு ஒட்டகம் திடீரென கடந்து சென்றது. எனவே அதன் மீது மோதாமல் இருக்க அவர் காரை திருப்பினார். அதையடுத்து அக்கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் அப்பகுதிஅவுஸ்ரேலியாவின் மிகவும் உள்ளடங்கிய பகுதி. விபத்து நடந்த இடத்தில் இருந்து யுலாரா என்ற நகர்ப்பகுதி சுமார் 140 கி.மீட்டர் தூரத்தில் இருந்தது.
அங்கு இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லை. இருந்தும் மன தைரியத்தை இழக்காமல் அவர் 2 நாட்கள் 140 கி.மீட்டர் தூரம் நடந்து யுலாரா நகரை அடைந்தார்.
வரும் வழியில் குடிக்க தண்ணீர் கிடைக்காததால் தனது சிறுநீரை குடித்து உயிர்பிழைத்தார். இருந்தும் உடலில் இருந்து நீர் வெளியேறியதால் மிகவும் சோர்வடைந்து மயக்கம் அடைந்தார். எனவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.