யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Read More »செய்திமுரசு
மணிவண்ணன் கைது
யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 011 ஆகஸ்ட் 11 ம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களிற்காகவே யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல் துறை பேச்சாளர் அஜித்ரோகாண தெரிவித்துள்ளார். யாழ்மாநகரசபையை சேர்ந்த ஐந்து பணியாளர்கள் காவல் துறையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறைக்கு பயங்கரவாத விசாரணை பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகளின் போது அந்த ஐவரும் அணிந்திருந்த சீருடைகள் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் ...
Read More »ஜெனிவாத் தீர்மானமும் பின்னும்
2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும் இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா கோயிலின் பங்குத்தந்தையாக அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் இருந்தார். மாதா கோயில் வளாகத்தில் ஒரு பெரிய பதுங்குகுழி இருந்தது.அதைத்தான் மருத்துவர்களும் மதகுருமார்களும் கன்னியாஸ்திரிகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திவந்தார்கள்.கடைசிக்கட்டப் போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு வலைஞர் மடம் தேவாலயம் ஒரு புகலிடமாகவும் இருந்தது. அந்நாட்களில் அத்தேவாலயம் ஓரூழிக்காலத்தின் சமூக இடையூடாட்ட மையமாகச் செயல்பட்டது.மாத்தளன் துறைமுகமும் வைத்தியசாலைகளும் அந்த மக்களுக்கான வெளி வாசலாகக் காணப்பட்டன. ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் ஐந்துநாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த ஐந்து நாடுகளில் வசித்த சுமார் 50 பேரை நாடுகடத்த முடிந்துள்ளது இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன ஏனையவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறியவேண்டும், விடுதலைப்புலிகளால் கூட ஒரு மணித்தியாலத்தில் எட்டு இடங்களில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ...
Read More »தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலிலவைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார். ...
Read More »இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை
கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
Read More »அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்
அனைத்துலக மனச்சாட்சித் தினம் – 05.05.2021 (இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின் நினைவுகள்) மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம் ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபை; ஏப்ரல் 5ஆம் திகதி அனைத்துலக மனச்சாட்சித் தினத்தைக் கொண்டாடுகிறது. அனைத்துல கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்தில் மனிதர்களினதும், உயிரினங்களிதும் வாழ்வினை அழிக்கும் இத்தகைய ஆயுதங்களைச் செய்யாது பாதுகாக்கவும், இப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பங்காளர்களாக உலகினர் வாழவும், இத்தகைய ஆயுதங்களால் பாதிப்புற்றவர்களின் வாழ்வை முன்னேற்றவும் ...
Read More »இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – முதல் இடத்தில் முகேஷ் அம்பானி
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர். 2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார். அதானி கிரீன், அதானி ...
Read More »11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அனுமதி
11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். ஐஎஸ், அல்ஹைதா உட்பட இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்வதற்கு சட்டமா அதிபர் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிசார ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளதுடன் தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பு காரணமாகவே இந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார். 1.ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) 02.சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ) 03.சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) 04.அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ) 05.ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM) ...
Read More »இலங்கை கொரோனா கொத்தணி உருவாக கூடிய ஆபத்து காணப்படுகின்றது!
இலங்கை நாளாந்தம் 100 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா கொத்தணி உருவாகக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத் தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளை கடைப்பிடிக்காவிட்டால் நாட் டில் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்று கூடும் இடம், சமூக இடைவெளியைப் பின்பற்றாத சந்தர்ப் பத்தில் கொரோனா தொற்று ஏற்படலாம்.நாளாந்தம் 100 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal