செய்திமுரசு

இரண்டு தசாப்தங்கங்களை தொடும் நிலையிலும் பொங்கி வழிந்த பொங்குதமிழ் பிரகடனம்!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டின் இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிபரம் வருமாறு, “ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் ...

Read More »

243 பேருடன் நியூசிலாந்து சென்ற இந்திய படகு எங்கே?

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்துக்கு 243 பேருடன் சென்ற இந்திய படகு காணாமல் போகி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுநாள் வரை அப்படகுக்கு என்ன நடந்தது? இப்படகு தடுத்து நிறுத்தப்பட்டதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டதா? அல்லது இடையே எங்கேனும் விபத்திற்கு உள்ளானதா என எந்தவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட இப்படகில் பயணம் செய்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சொல்லப்படும் நிலையில், படகில் சென்றவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியாமல் இவர்கள் உறவினர்கள் தவித்து ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்றவர்!

அப்துல் ரகுமான் என அறியப்படும் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர், விசா காலம் முடிந்த நிலையில் கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிகுந்த சோர்வுடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கரா மாகாணம் அருகே மிதந்து கொண்டிருந்த அவரை, உள்ளூர் மீனவர் ஒருவர் மீட்டிருக்கிறார். “கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நீந்திச் செல்ல முயன்ற நிலையில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் கடலில் தவித்து வந்திருக்கிறார்,” எனக் கூறியிருக்கிறார் மலாக்கா காவல்துறையின் தலைமை அதிகாரி ஆல்பெர்ட் நீனோ. “அவர் மீட்கப்பட்ட பொழுது, மிகவும் ...

Read More »

இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைது!

திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, விக்டோரியா காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருட்டுக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெண்கள் மூவரும் ஆண்கள் நாள்வரும் அடங்குவதுடன் இவர்கள் 25- ...

Read More »

தமிழ் இளைஞர்கள் கடத்திய சிறிலங்கா கடற்படை அதிகாரிக்கு பதவி உயர்வு!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தசநாயக்க ரியர் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 2008 முதல் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பி;ல் காணாமல் போன 11 இளைஞர்கள் தொடர்பிலேயே இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

Read More »

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் திடீரென பெய்த மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்ததால், தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் ...

Read More »

குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாருமில்லை!

குழந்தைகளின் உலகம் குதூகலத்தை, கொண்டாட்டத்தை, உற்சாகத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரதிபலிக்கக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுடைய உலகுக்குள் நவீன விஞ்ஞானம் நுழைந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டது. பயணத்தின்போது ஒரே ஒரு செல்பேசிதான் இருக்கிறது என்றால், குழந்தைகள் ஒரே இருக்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளுக்கொரு செல்பேசிகள் இருந்தால் தனித்தனி உலகுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். முன்பு, கதைகளாலும் விளையாட்டுகளாலும் இணைந்திருந்த குழந்தைகளின் உலகம், இப்போது செல்பேசிகளால் நிலைகுலைந்திருக்கிறது. வீடுகளில் இப்போது குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆட்கள் யாருமில்லை. கதை சொல்லும் நபர்கள் தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். கதை கேட்கும் சூழல் இப்போது கதை பார்க்கும் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வறட்சி: 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன!

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடியினரின் வாழ்வாதாரங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாக 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வறட்சி மற்றும் கடும் காட்டுத்தீயினால் அதீத உஷ்ணங்களைத் தாங்க முடியாமல் ஒட்டகங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதிகளுகு வரத்தொடங்கின. இவைகளின் வரத்தினால் நீராதாரம், ஏற்கெனவே பற்றாக்குறையில் உள்ள உணவுகள் ஆகியவற்றுக்கு ஆபத்து நேர்ந்ததால் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 5000 ஒட்டகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அனங்கு யாங்குனியாஜராவில் சுமார் 2,300 பூர்வக்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 5,000 ஒட்டகங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஞாயிறன்று முடிந்ததாக அதிகாரிகள் ...

Read More »

நாங்கள் வேலை தருகிறோம் – ஹாரிக்கு அழைப்பு !

பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹாரிக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக ’பர்கர் கிங்’ அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை காதல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையினத் தந்தை, கருப்பினத் தாய்க்குப் பிறந்த மேகன் மெர்கலுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அரச குடும்பத்தினர் பொதுமேடைகளில் அவதூறாகப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ...

Read More »

ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ராஜினாமா!

தனது பதவியை ராஜினாமா செய்வதாக ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பை அவர் ரஷ்ய அதிபர் முன்னிலையில் நேற்று (15.01.20) வெளியிட்டார். ரஷ்ய அரசியலமைப்பில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்த திட்டங்களை நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், ”இந்தத் திட்டங்கள் குறித்து குடிமக்கள் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். பொதுக்கருத்தின் அடிப்படையிலேயே நம்மால் ஒரு வளமான நாட்டை உருவாக்க இயலும். இந்த மாற்றங்கள் ஒரு புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை ...

Read More »