வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் ...
Read More »செய்திமுரசு
மஹிந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
கொழும்பு – கடவத்தை பகுதியில் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டடுகின்றது. கொழும்பில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கொடி கட்டிய பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Read More »பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்! – புலனாய்வு தகவல்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75000 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக் காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை ...
Read More »140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்!
உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் ...
Read More »ஜுர்கென் ஹெபர்மாஸ்: அறிவுஜீவியின் இலக்கணம்!
என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த அறிவுஜீவிகளுக்கு எட்வர்ட் சய்யீத் பெரிய கதாநாயகர். கிழக்கு நாடுகளை விமர்சித்து எழுதிய மேற்கு நாடுகளின் அறிவுஜீவிகளைத் தாக்கி அவர் எழுதிய கட்டுரைகளால் நாங்கள் பூரிப்படைந்தோம். மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் – இஸ்ரேலின் குற்றச்செயல்களை அவர் கண்டித்த விதத்தையும், பாலஸ்தீனர்களுக்குக் காட்டிய பரிவையும் மிகவும் மெச்சினோம். என்னுடைய நண்பர்களில் சிலர் வளர்ந்த பிறகும் சய்யீத் மீது கொண்டிருந்த பக்தி குறையாமல் இருந்தனர். எனக்கோ லேசான அலுப்புத் தட்டியது. கீழ்த்திசை நாடுகளின் இலக்கியங்களைப் படிக்கப் படிக்க நல்ல புரிதல் ...
Read More »மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த முனைகிறார்!-நளின் பண்டார
குற்றங்களுக்கான தண்டனைகள் நெருங்குகின்ற நிலையில் அதற்கு அச்சப்பட்டு மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார் என சட்ட ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு எதிர் தரப்பினர் தலைநகரில் முன்னெடுக்கவுள்ள போராட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பனையும் ஏற்படுத்தாது. எனினும் இப் போராட்டத்தினால் அப்பாவி பொது மக்களே பாதிக்கப்படுவர். மக்களை பலி கொடுத்து ஆட்சியினை கைப்பற்றுவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன் தொடர்ச்சியையே தற்போதும் தொடர முயல்கின்றனர். அத்துடன் பொது எதிரணியினர் தம்மை பாதுகாத்துக் ...
Read More »யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லையாம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவைளை, வேண்டுமானால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்த இணக்கப்பாட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் ...
Read More »இனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும்! – முன்னாள் மனைவி
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நீங்கள் வெளியிட்ட புத்தகம் இம்ரான் கானை தாக்கி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் கண்டுகொள்வதில்லை. அந்த சமயங்களில் நான் காது கேளாதவள் ஆகிவிடுவேன். இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் மக்கள் ...
Read More »புதிய தோற்றத்துடன் அவுஸ்திரேலிய நாணயங்கள்!
அவுஸ்திரேலியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய நாணயங்களில் எலிசபெத் மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்படவுள்ளது. நாணயங்களில் பொறிக்கப்படவுள்ள மகாராணியின் புதிய தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை Governor-General Peter Cosgrove நேற்று (03) வெளியிட்டு வைத்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவைச் சேர்ந்த Jody Clark என்பவரினால் வடிவமைக்கப்பட்ட மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்பட்ட நாணயங்கள் அடுத்த ஆண்டு முதல் பாவனைக்கு வரும் என தெரிகிறது.
Read More »மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என பொது எதிரணி!
அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் ஒரே நோக்கத்தில் அரசாங்கமும், மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது எதிரணியும் அரசியல் செய்துவருகின்றன. இரண்டு கள்வர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கோத்தா, பஷில் இருவரும் அமெரிக்க பிரஜைகள். அமெரிக்கா என்ன சொல்கின்றதோ அதையே செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...
Read More »
Eelamurasu Australia Online News Portal