இன்று இந்த நிலைமைக்குச் சென்றிருக்காது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: “இலங்கையின் வெளிவிவகார கொள்கை என்பது இப்பொழுது பாரிய விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் நாடு அல்லோல கல்லோலப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், இருபத்தியொருபேர் கொண்ட சீன உயர்மட்டக் குழுவினரின் வருகையும் இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக்பொம்பியோ வரவிருப்பதும் இதற்கு முன்னர் இந்திய – இலங்கை பிரதமர்களுக்கிடையிலான ...
Read More »செய்திமுரசு
சுவாச துளிகள் மூலம் குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
குளிர்காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வரும் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘நானோ லெட்டர்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதுபற்றி பேராசிரியர் யானிங் ஜூ மற்றும் ...
Read More »மருத்துவரின் மாஸ்கை கழற்றும் பிறந்த குழந்தை
கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை குழந்தையின் புதிய வரவு உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் ...
Read More »திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா
திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியொருவரை அமெரிக்கா நியமித்தமை குறித்து சீனா கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது. திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியாக ஜனநாயகம் மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்காக உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் டெஸ்டிரோ செயற்படுவார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ அறிவித்துள்ளார். 2017 முதல் குறிப்பிட்ட பதவிக்கு எவரும் நியமிக்கப்படாமலிருந்த நிலையிலேயே புதிய பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. திபெத்த் ஸ்திரமிழக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கின்றது என சீனா தெரிவித்துள்ளது. ...
Read More »தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் நாளை யாழ்ப்பாணத்தில் கூடுகின்றன
தியாகி திலீபனின் நினைவேந்தலுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா விடுத்திருக்கின்றார். “தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20 ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்” என மாவை சேனாதிராஜா தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார். “ஏற்கனவே நாம் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். ஒரு உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருக்கின்றோம். இந்த நிலையில் ...
Read More »கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இதனால் நோய்தொற்று ஏற்படாத மாவட்டமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு புதிய தடை!
ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா பெற ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு பாரம்பட்சமிக்கது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது சமூகப் பிணைப்புக்கு உதவியாக இருக்கும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய அரசு. “விசா கோரி விண்ணப்பிப்பவரும், அவருக்கு ஸ்பான்சர் செய்பவரும் செயல்பாட்டு அளவிலான ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்,” எனக் ...
Read More »இலங்கைத் தீவில் சர்வாதிகார பெரும்பான்மை ஆட்சி தலையெடுக்கிறது
ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சிங்களத் தேசியவாதம், பௌத்த அடிப்படைவாதம் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றிவாகும். மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் போர்க் கதாநாயகர்களாக சிங்கள-பௌத்த பெரும்பான்மையினால் கணிக்கப்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி மற்றும் ‘ஈஸ்ரர் 2019’ தாக்குதலுக்கு இட்டுச்சென்ற பாதுகாப்பு முன்னேற்பாட்டுக் குறைபாடு என்பன அதே ஆண்டு கோத்தபாய ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் பதவியேற்பதற்குரிய வழியைத் திறந்துவிட்டிருந்தது. 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான சூழல், குடும்ப ஆட்சிக்கான அதிகாரத்தை மேலும் வலுவாக்கியுள்ளது:பொதுஜன பெரமுன – இடதுசாரிக் ...
Read More »“ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது”
” மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு வராமல் வெறுமனே ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரத்தியேக நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார். 0 திலீபன் நினைவேந்தலின் போது தமிழ்க் தேசியக் கட்சிகள் சிலவற்றிடையே இணைந்து செயற்படுவதற்கான உடன்பாடு ...
Read More »வடக்கு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் போராட்டம்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முல்லைத்தீவில் வடக்கு ஊடகவியலாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லை மாவட்ட செயலக முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்த வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பொலிஸ் நிலைய முன்றலில் முற்றுகையிட்டு கவனயீர்ப்பை செய்த பின்னர் முல்லைத்தீவு வனவள திணைக்கழத்துக்கு முன்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மரங்களையும் நாட்டியிருந்தனர். அத்துடன் ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
Read More »