திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா

திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியொருவரை அமெரிக்கா நியமித்தமை குறித்து சீனா கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது.

திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியாக ஜனநாயகம் மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்காக உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் டெஸ்டிரோ செயற்படுவார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ அறிவித்துள்ளார்.

2017 முதல் குறிப்பிட்ட பதவிக்கு எவரும் நியமிக்கப்படாமலிருந்த நிலையிலேயே புதிய பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. திபெத்த் ஸ்திரமிழக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கின்றது என சீனா தெரிவித்துள்ளது.

திபெத் விவகாரம் சீனாவின் உள்விவகாரம் இதில் வெளியாட்கள் எவரும் தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது.

புதிய பிரதிநிதி சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு திபெத்தினை ஸ்திரதன்மை இழக்கச்செய்வதற்கான நோக்கத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளார் என சீனா தெரிவித்துள்ளது. இதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள சூழலிலேயே இந்த விவகாரம் புதிதாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.