செய்திமுரசு

சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை

சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இதன் உரிமையாளர் ஜிம்மி லாய். இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன அரசுக்கு எதிராக நடந்த ...

Read More »

காங்கோவில் எரிமலை பெரிய அளவில் வெடிக்கும் அபாயம்

எரிமலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா காங்கோ எரிமலை உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு இந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறி அருகில் உள்ள கோமா நகருக்குள் புகுந்தது. அதில் லாவா குழம்புகள் தாக்கியும், அதில் உருவான நச்சுப்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 32 பேர் பலியானார்கள். 172 குழந்தைகள் உட்பட பலரை ...

Read More »

கொரோனா நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் ஆகும்

கொரோனா நோயாளிகளில் பலர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு பல மாதங்கள் அவர்களுக்கு சுவாசப்பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. கொரோனா நோயாளிகளுக்கு நீண்ட கால அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு குறைந்தபட்சம் 3 மாத காலத்துக்கும், சில நோயாளிகளுக்கு மேலும் கூடுதல் காலத்துக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதும், இதை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வு தேவை ...

Read More »

யாழ். பல்கலை. மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டமைக்கான காரணம்?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொவிட்-19 தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்திகள் வெளிவந்துள்ளதை அவதானித்து கவலையடைகின்றோம். இச்செய்திகள் எமது திணைக்களம் தொடர்பாக தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இச்செய்திகள் தொடர்பான உண்மை ...

Read More »

யாழில் கோவிட் தொற்றால் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கடந்த 26ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு,எம்.ஜே.ஜா மன்னபுரி சாலை பகுதியை சேர்ந்த 5 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

Read More »

படகு மூலம் தப்பிச் சென்ற மெகுல் சோக்சி டொமினிகாவில் சிக்கினார்

டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி (வயது 62), ஆன்டிகுவாவில் தஞ்சம் ...

Read More »

நமோ நமோ சீனா…

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம். இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என ...

Read More »

சிறிலங்காவில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம்

சிறிலங்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் பதிவாகிய 221 மரணங்களில் 54 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். அதில் 22 மரணங்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று உறுதி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டால் எதிர்வரும் வாரத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read More »

கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து

கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சிறிலங்கா கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. கப்பலில் உள்ள இரசாயணங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார். கப்பலுக்குள் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கப்பலின் 1,487 கொள்கலன்கள் ...

Read More »

கிறிஸ்மஸ் தீவிலுள்ள தமிழ் குடும்பத்தின் விடுதலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கிறிஸ்மஸ் தீவில் குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கையாளரான பிரியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் தெரிவித்துள்ளார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்ற நிலையில், பிரியா அவரது கணவர் நடேஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளான கோபிகா, தருணிகா ஆகியோர் கடந்த பல மாதங்களாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தனது தங்குமிடத்திற்கு வந்த காவலாளி ஒருவர் ...

Read More »