கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ...
Read More »செய்திமுரசு
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் பஷில்!
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார். வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அவர் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே நியமித்திருந்த தினத்திற்கு முன்னரே, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த கரிசனை காட்டியுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளதாக அறியமுடிகிறது. அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அத்துடன் அச்செயலணி ஒக்டோபர் ...
Read More »விடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் புனிதபிரதேசமாக இருந்தது!
வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் குற்றச்சாட்டியுள்ளார். வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியை போதைவஸ்து தரையிறக்கப்படும் இடமாக இருக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியுள்ளது என யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடகசந்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் வடமராட்சி ...
Read More »வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும்! – இராணுவத்தளபதி
குறிப்பிட்ட காலத்திற்கு எங்களிற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கினால் எங்களால் வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும் என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்தால் இராணுவம் தனது கடமையை நிறைவேற்றும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரும் தொடர்புபட்ட விடயம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இராணுவம் வலுவாக உள்ளது தேசிய பாதுகாப்பே அதன் முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து எங்களிற்கு ஏனையவர்களை விட அதிகம் தெரியும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான ...
Read More »யாழ். மாநகர சபையில் பட்டியலிடப்பட்ட மோசடிகள்!
சபை பொறுப்பேற்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பட்டியல் யாழ்ப்பாணம் மாநகர சபை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஆராய்ந்த மேயர் அனைத்துக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 6 ஆவது அமர்வு மேயர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதிலேயே இந்தப் பட்டியலை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவின் தலைவர் ராஜீவ்காந்தால் சமர்ப்பிக்கப்பட்டது. பட்டியலைச் சமர்ப்பித்த அவர் தொடர் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்குமாறும் வலியுறுத்தினார். முறையற்ற ...
Read More »பட்டுப்பாதை திட்டம் குறித்து ஆலோசிக்க சீனா செல்கிறார் இம்ரான் கான்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசு முறை பயணமாக அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு அனைத்து தரப்பிலும் நட்பு நாடாக இருக்கும் சீனாவிற்கு இம்ரான் கான் அடுத்த மாதம் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா செல்லும்போது இம்ரான் கானுடன் உயர்மட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள் என பாகிஸ்தான் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் வாழ்த்து தெரிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், அவரை சீனாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ...
Read More »பிரசவத்தை நேரலை செய்யப்போவதாக அறிவித்த அவுஸ்திரேலிய தாய்!
அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது 4 வது பிரசவத்தை நேரலையாக இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்புவேன் எனத் தெரிவித்துள்ளார் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த Jessica Hood (வயது 30) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். இக்குழந்தைக்குப் பின் வேறு எந்தக் குழந்தையையும் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். தான் சந்தித்த மனநல பிரச்சனைகள் மற்றும் தனது பதிவுகள் என்று பதிவிட்டு வந்துள்ளார். இவரை மூன்று ஆண்டுகளில் 14 ...
Read More »வடக்குக்கு வந்துள்ள ஆபத்து!
காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன. இந்த அறிக்கையில், 2050ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொள்ளப் போகின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இலங்கைத் தீவிலும், ...
Read More »அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட நிசாம்தீன் பிணையில் விடுதலை!
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More »13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்! – தவநாதன்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும், வட மாகாணத்துக்கான முழுமையான தேவை பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும், நில அபகரிப்பு இல்லாமல் மகாவலி நீர் வடக்கிற்கு வர வேண்டும், இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும் வரை வடமாகாணத்திற்கு வெளியே உள்ள மக்களை திட்டமிட்டு குடியேற்றுவதை நிறுத்த வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பானிய தூதரக அரசியல் விவகாரப் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அதிகாரியான யுனா மயெகாவா நேற்று மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் ஈழ ...
Read More »