இறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர் ...
Read More »செய்திமுரசு
ஜெனிவாவுக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு செல்கிறது!
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பும் முன்னோடி நடவடிக்கைகளுக்காக பங்கேற்கும் அதில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நாளை 20/02/2019ம் திகதி தமது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனிவாவில் ...
Read More »சிறிலங்கா காவல் துறையினர் என்னை சித்திரவதை செய்தனர்!
திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் தன்னை காவல் துறையினர் சித்திர வதைக்கு உள்ளாக்கினர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கின் சாட்சியாக முறைப்பாட்டைப் பதிவு செய்த மற்றும் சந்தேகநபர்களைக் கைது செய்ய உதவிய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அதன்பின்னர் சாட்சியத்தில் குறுக்கு விசாரணைகள் ...
Read More »அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு!
அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை ...
Read More »நீதிக்குக் காத்திருக்கும் கௌரியின் மகள்!
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் இறுதிக் கணங்களைப் பற்றி அவரது சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் இணையத்தில் எழுதிய நினைவுக் கட்டுரை வைரலாகிக்கொண்டிருக்கிறது. அம்மா கவிதா லங்கேஷின் இயக்கத்தில் ‘சம்மர் ஹாலிடேஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாரே அதே சிறுமிதான். ‘அம்மாவைக் கொலைசெய்தவர்களின் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவர்களையும் அதேபோலச் செய்ய வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தோன்றியது. அந்த வலியை அவர்கள் உணர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதனால் என் அம்மா திரும்ப வர மாட்டார். பழிக்குப் பழி ...
Read More »சான்ஸ் ஃபார்காட்டிகா: நினைவாற்றலைப் பெருக்கும் எழுத்துரு முயற்சி!
வாசகர்கள் படித்ததை மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் வாய்ப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை உருவாக்கியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, சாதாரண ‘ஏரியல்’ எழுத்துருவில் 50% நினைவுவைத்துக்கொள்ள முடியும் என்றால், புதிய எழுத்துருவான ‘சான்ஸ் ஃபார்காட்டிகாகா’வில் 57% நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த எழுத்துருவினை உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று ...
Read More »தமிழ் ஆளுமைகளைக் கொண்டாடுவோம்!
‘தமிழ் திரு’ வாழ்நாள் சாதனையாளர் விருது: கோவை ஞானி கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய கோவை ஞானி மார்க்ஸிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுவருகிறார். தமிழ் மரபையும் மார்க்ஸியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்ஸியத்தைப் படைத்துள்ளார். ‘புதிய தலைமுறை’, ‘வானம்பாடி’, ‘மார்க்சிய ஆய்விதழ்’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’, ‘தமிழ் நேயம்’ என்று தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். கோவை வட்டாரத்தில் சிறந்த தமிழ் அமைப்புகளை உருவாக்கியதோடு சிறந்த ஆய்வாளர்களை, கட்டுரையாளர்களை, படைப்பாளிகளையும் உருவாக்கினார். கடந்த 40 ஆண்டுகளில் ...
Read More »“துரையப்பா மைதான பெயரை மாற்றுங்கள்” -பிரேரணைக்கு தயாராகிறது ரெலோ
யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரினை மாற்றுவதற்கு ரெலோ எடுத்த முயற்சி சர்ச்சையாக வெடித்துள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வரான துரையப்பா தமிழினத் துரோகி என அடையாளப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதால் யாழ்ப்பாணம் மாநகரசபையின் கட்டுப்பாட்டிலுல் துரையப்பாவின் பெயிரில் அமைந்த துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான முழுமுயற்சியில் யாழ் மாநகர துணை முதல்வரான ரெலோ அமைப்பினைச் சேர்ந்த துரைராசா ஈசன் ஈடுபட்டுவருகின்றார். இதன்பொருட்டு யாழ் மாநகரசபையின் 21 ஆம் திகதிய அமர்வில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பிப்பதற்கு தயாராகிவரும் அவர் இதற்கு ஆதரவு ...
Read More »பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை!
பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை இங்கிருந்த ...
Read More »டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் ...
Read More »