சென்னை பூந்தமல்லியில் கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்த இலங்கை நபர் கைது செய்யப்பட்டார் .சென்னை பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்த இலங்கை தானுகா ரோஷன் என்பவரை காவல் துறை கைது செய்துள்ளனர். கடந்த ஓராண்டாக தங்கியிருந்த தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் அம்பலமானது. கொலை வழக்கில் தொடர்புடைய இவர் பூந்தமல்லியில் சுதர்சன் என்ற பெயரில் தங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read More »செய்திமுரசு
பிரியங்கா மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?
மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது. கட்சி மேலிடம் கூறினால் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவும் கூறியிருந்தார். ஆனால், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போட்டியிட்ட அஜய் ராய், மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வாரணாசியில் மோடி ஆதரவு அலை வீசுவதால், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ...
Read More »சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.
உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். ...
Read More »எனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டாம்!
தனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டாமென, பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பைக் காட்டிலும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு, ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு நிமித்தம் வழங்கப்பட்ட வாகனம் குண்டு துளைக்காத வாகனம் என அறிந்துக் கொண்டதன் பின்னர் அதனை நிராகரித்ததாக பேராயர் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது!
மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் காவல் துறையினரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் ...
Read More »பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கோட்டேகொட நியமனம்!
ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (29) நண்பகல், ஜனாதிபதி செயலகத்தில், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
Read More »கறை!
நாட்டில் எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சமும் பதற்றமும், மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது. இன்னும் என்ன சம்பவம் நடந்து, அதன் மூலமாகவும், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணம் (இமேஜ்), மேலும் சிதைவடைந்து விடுமோ என்ற கவலை, இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தினதும் இயல்புநிலை, ‘ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள் முடங்கும் ஓர் அப்பாவியைப் போல’, முடங்கிக் கிடக்கின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, கொச்சிக்கடை, தெமட்டகொட, கட்டுவான, மட்டக்களப்பு, தெஹிவளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் ...
Read More »இலங்கையை ஏன் தாக்கினோம்? -ஐ.எஸ் தலைவர்
சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்டுள்ள இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இறுதிப் போரின் ...
Read More »அமெரிக்காவில் தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். ...
Read More »கோப்பி சுவையுடன் ஊக்க பானமாக புதிய கொக்கொ கோலா!
புதிய கோப்பிச் சுவையுடன் கூடிய ஊக்கபானத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொக்கொ கோலா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த ‘ரகசிய மருந்து’ தான் நாளடைவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ‘ கொக்கொ கோலா’ என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கொக்கொ ...
Read More »