செய்திமுரசு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி  காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத் திலிருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர் வெலிகம பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரி வித்தார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் குறித்த சந்தேகநபர் கைது செய் யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.   குறித்த சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா பணம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை… 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு

கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த  வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் ...

Read More »

அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு ஜோ பைடன் கடும் கண்டனம்

ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.‌ ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ...

Read More »

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அதிகரிக்கலாம்

இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் ; அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்பதுடன் அந்தச் ...

Read More »

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா… சீன தடுப்பூசி போட்ட 2 நாளில் பாதிப்பு

பாகிஸ்தானில் தற்போது சீனா வழங்கிய சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தடுப்பூசி (முதல் தவணை) போட்டுக்கொண்டார். இந்நிலையில், இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் ...

Read More »

மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது முற்றும் முழுதாக இந்தியாவை பொறுத்தவிடயம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது என தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையின் அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தியா தமிழ் மக்களின் அரசியல் ...

Read More »

பல்கலை மாணவர் இருவர் உட்பட 9 பேருக்கு நேற்று தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மானிப்பாயைச் சேர்ந்த தாய், மகள் உட்பட யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ...

Read More »

ஆஸ்திரேலியா பப்பு நியூ கினியா: அகதிகளுக்கு கொரோனா தொற்று

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் கடல் கடந்த தடுப்பு தீவாக செயல்படும் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்றைய நிலையில், அத்தீவில் சுமார் 90 அகதிகளும் 40 தஞ்சக்கோரிக்கையாளர்களும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது கொரோனா தொற்றினால் அகதி ஒருவர், வயிற்று வலிக்கான மருத்துவ சிகிச்சைக்கு ...

Read More »

நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்!

பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக,  நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் நேற்று மார்ச் 18இல் காலமானார். போராட்டம் சம்பந்தமான செய்திகளையும் தகவல்களையும் மக்களிடம் உடனுக்குடன் கொண்டு போய்ச்  சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அதன் ஆரம்பகர்த்தாவாக கேணல் கிட்டுவின் வழிநடாத்தலில் பெரும் பங்காற்றியவர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படப் பிரிவு, ஆவணப் பிரிவு, குறும்படம், விடுதலைப் பாடல் ஒலிப்பதிவு, ஒலிநாடா வெளியீடு, புலிகளின் ...

Read More »

விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க முடியாது என்றும் வட கொரியாவின் முதல் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சோன் ஹுய் தெரிவித்துள்ளார். கொரிய மத்திய செய்தி நிறுவனத்தினால் இன்று (வியாழக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடகொரியாவுடன் தொடர்பை வலுப்படுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கன் சில இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், இதுகுறித்து வட கொரியாவின் முதல் ...

Read More »