செய்திமுரசு

மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை….!-வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனிய

பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று என்பவற்றுக்கு கொத்தமல்லி, வெனிவேல் என்வற்றை பயன்படுத்துவதன் பலாபலன் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். அத்தோடு மூலிகை இலைகளைப் பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறைமையை பின்பற்றுவது சிறந்த நோய்த் தடுப்பு முறைமை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், கொத்தமல்லி மற்றும் வெனிவேல் தொடர்பில் அறிவியல் – தொழிநுட்ப அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் நோய்த்தடுப்பு சக்தி தொடர்பில் மூன்று பிரிவுகள் இணங்காணப்பட்டுள்ளன. அந்த ...

Read More »

ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள காவல் துறை நிலையங்களில் ; மக்கள் ஒன்று கூடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை முறைகளை அரசாங்கம் நடை முறைப்படுத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதில் காவல் துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், ...

Read More »

ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே

சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை இதன்மூலம் தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஆலன் பார்டரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய ...

Read More »

இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சுவதற்கு காரணம்!

ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும். இந்திய வீரர்களை சீண்டியே அவுட்டாக்கும் யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றப்பிறகு, விராட் கோலி ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ...

Read More »

மர்மப்பொருள் வெடித்ததில் சிறுமிக்கு காயம்!

பண்டாரவளை – கினிகம பகுதியில் சிறுமியொருவரின் கையிலிருந்த பொருளொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை காவல் துறை  பிரிவுக்குப்பட்ட கினிகம பகுதி வீடொன்றில் ;இன்று செவ்வாய்கிழமை வெடிப்பின் போது காயமடைந்த சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது 11 வயதுடைய சிறுமியொருவரே காயமடைந்துள்ளதுடன் இவர் விளையாடுவதற்காக கையில் வைத்திருந்த பொருளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிறுமி தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ...

Read More »

கொவிட் 19 பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை!

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது. அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும தனக்கு கிடைக்க வேண்டிய ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று ஜனாதிபதியிடம் கையளித்தனர். தேசிய லொத்தர் சபை 25 மில்லியனையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சா சபையின் பொறியியல் பிரிவு ஆகியன இணைந்து 2.5 மில்லியன் ரூபா வீதமும், காணி சீர்திருத்த ஆணைக்குழு 2 மில்லியன் ரூபாவையும், மெலிபன் பிஸ்கட் தனியார் ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (07.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 180 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது வைத்தியசாலையில் 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா தொற்றினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான ; 38 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

யாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் ...

Read More »

ஆப்பிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆப்பிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு பரிசோதித்து பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, இந்த ஏதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மனித குலத்தை மிரட்டி வரும் இந்த கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது இன்னும் பரிசோதனை ...

Read More »

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஓ’கீபே. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து விளையாடும்போது ஒரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 35 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால், ...

Read More »