கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது.
அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும தனக்கு கிடைக்க வேண்டிய ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
தேசிய லொத்தர் சபை 25 மில்லியனையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சா சபையின் பொறியியல் பிரிவு ஆகியன இணைந்து 2.5 மில்லியன் ரூபா வீதமும், காணி சீர்திருத்த ஆணைக்குழு 2 மில்லியன் ரூபாவையும், மெலிபன் பிஸ்கட் தனியார் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவையும், மாத்தறை போதி பாதுகாப்பு பேரவை ஒரு மில்லியன் ரூபாவையும் மற்றும் நேச்சர் பியூட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவையும் நன்கொடை வழங்கியுள்ளது.
இலங்கை வங்கியில் 85737373 என்ற விசேட கணக்கு இலக்கம் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கொடையாளர்கள் ´கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதிபங்களிப்பு செய்ய முடியும்.
இவ்வாறு நிதி பங்களிப்பு வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு வரி மற்றும் அந்நிய செலாவணி விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
காசோலைகள் மற்றும் தந்தி பரிமாற்றங்கள் ஊடாக இந்த நிதியத்திற்கு பணத்தை வைப்பில் இட முடியும்.
கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கப்படும் பணம் நிதி மற்றும் வங்கி ஆகிய துறைகளில் திறமையான நிபுணர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த நிதியத்திற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கிகளின் தலைவர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், முன்னணி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றால் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்க முடியும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களை 011 – 2354479, 011 – 2354354 என்ற இலக்கத்தின் ஊடாக நிர்வாக பணிப்பாளர் நாயகம் கே.பி.எக்கொடவெலவை அழைத்து பெற்றுக்கொள்ள முடியும்.