பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று என்பவற்றுக்கு கொத்தமல்லி, வெனிவேல் என்வற்றை பயன்படுத்துவதன் பலாபலன் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.
அத்தோடு மூலிகை இலைகளைப் பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறைமையை பின்பற்றுவது சிறந்த நோய்த் தடுப்பு முறைமை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,
கொத்தமல்லி மற்றும் வெனிவேல் தொடர்பில் அறிவியல் – தொழிநுட்ப அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அதில் நோய்த்தடுப்பு சக்தி தொடர்பில் மூன்று பிரிவுகள் இணங்காணப்பட்டுள்ளன. அந்த மூன்று முறைமைகளையும் ஆராயும் போது பக்றீரியா தொற்றுக்காக கொத்தமல்லி பயன்படுத்தப்படுவதன் மதிப்பும் அதேபோன்று வைரஸ் தொற்றுக்காக வெனிவேல் பயன்படுத்துவதிலுள்ள பயனும் இனங்காணப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் எனது தலைமையில் ஆராய்ச்சி குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மூலிகைகளை கொதி நீரில் இட்டு ஆவி பிடிப்பதிலுள்ள பயன்கள் தொடர்பில் இந்த குழு ஏகமனதான தீர்மானமொன்றை எடுத்திருக்கிறது.
சீனாவில் சூடான நீர் பருகுதல் மற்றும் வவ்வேறு முறைமைகளில் ஆவி பிடித்தல் என்பவற்றை பின்பற்றியதை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேற்குலக நாடுகளில் ஆவி பிடித்தல் முறைமையைப் பின்பற்றுவது அரிது என்பதால் அந்த மக்கள் கூந்தல் உலர்த்தும் இலத்திரனியல் உபகரணத்தைப் பயன்படுத்துகின்றனர்.
எனினும் நாம் இது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருக்கின்றோம். அதன் மதிப்பை உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். எனினும் அது வரையில் ஆராய்ச்சி குழு என்ற ரீதியில் நாம் ஒவ்வொருவரும் வீடுகளில் சிறு பாத்திரத்தில் சுடு நீரில் மூலிகை இலைகளை இட்டு துணியால் முழுமையாக மூடி ஆவி பிடித்தலை பின்பற்றுமாறு அறிவுறுத்த ஏகமதான தீர்மானித்திருக்கின்றோம். இதன் போது கண்களுக்கு படாமல் பாதுகாப்பாக ஆவி பிடிக்க வேண்டும்.
தற்போது உள்நாட்டிலிருந்து மாத்திரமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியத்துறையுடன் தொடர்புடையவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்வாறானவர்களை எமது ஆராய்ச்சி குழுவிற்கு முக்கியமான விடயங்களை பரிந்துரைக்குமாறு கோருகின்றோம்.
சீனா, ஹொங்கொங், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் உள்ளுர் முறைமைகளை பயன்படுத்தியுள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை பிரதி பலன் என்பவற்றினை ஆராய்ந்து இலங்கையிலும் அது தொடர்பில் ஆராய்வது முக்கிய விடயமாகும்.
Eelamurasu Australia Online News Portal