பண்டாரவளை – கினிகம பகுதியில் சிறுமியொருவரின் கையிலிருந்த பொருளொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை காவல் துறை பிரிவுக்குப்பட்ட கினிகம பகுதி வீடொன்றில் ;இன்று செவ்வாய்கிழமை வெடிப்பின் போது காயமடைந்த சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது 11 வயதுடைய சிறுமியொருவரே காயமடைந்துள்ளதுடன் இவர் விளையாடுவதற்காக கையில் வைத்திருந்த பொருளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமி தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பண்டாரவளை காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal