செய்திமுரசு

முடக்கப்படும் பிரதேசங்களின் விபரம்

12 மாவட்டங்களில், 24 கிராம  சேகவர் பிரிவுகள், நாளை (21) காலை 4 மணிமுதல் முடக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை,  யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே பிரதேசங்கள் முடக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் மாவட்டம்        ​       பொலிஸ் பிரிவு                         கிராமசேவகர் பிரிவு கொழும்பு                 தெமட்டகொட                        ஆராமய பிரதேசம் 66ஆம் தோட்டம் அம்பாறை                சம்மாந்துறை                           ...

Read More »

பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்

மே 10-ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக பலஸ்தீனத்தின் காஸா மீது தனது இராணுவ இயந்திரத்தினை ஏவி தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது இஸ்ரேல். பெருமெடுப்பில் வான், தரை வழித்தாக்குதல்களில், மொத்தம் 240 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 வரையானவர்கள் சிறுவர்கள். காஸாவில் அமைந்திருந்த ஊடகக் கட்டிடத்தை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல் நடாத்தி அதனை இஸ்ரேல் படைகள் தரைமட்டமாக்கியுள்ளன. அல்-ஜசீரா, AP உட்பட்ட உலக ஊடகங்களின் அலுவலகங்கள் அக்கட்டிடத்தில்தான் அமைந்திருந்தது. கட்டிட உரிமையாளருக்கு முற்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, ஒரு மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு, 12 மாடிகளைக் கொண்ட அந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகளை பிற நாடுகளில் குடியமர்த்தும் திட்டம் முறையானதா?

ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கிலோ மீட்டர்கள் அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை நடத்தப்பட்ட விதம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் தற்காலிகமாக வாழ அந்நாட்டு அரசு அனுமதியிருக்கிறது. அதே சமயம், அவர்களின் எதிர்காலம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே உள்ளது எனக் கூறப்படுகின்றது. இந்த சூழலில் தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவது குறித்த விவாதங்களும் ஆஸ்திரேலிய அரச மட்டத்தில் நடந்தன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தங்கள் ...

Read More »

ஆஸ்திரேலிய சமூகத் தடுப்பில் தமிழ் அகதி குடும்பம்

ஆஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் தற்போது ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரி, சமூகத் தடுப்பு என்றால் என்ன? ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா பெற காத்திருக்கும் அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இத்தடுப்பில் வைக்கப்படுகின்றனர். இத்தடுப்பில் சம்பந்தப்பட்ட அகதி தடுப்பு முகாம் அல்லது கடல் கடந்த தடுப்பிற்கு பதிலாக பிற சுதந்திரமான நபர்களைப் போல வீட்டில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதில் அகதிகள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள், ...

Read More »

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தவறியோருக்கான அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது இந்நிலையில் நாட்டில் அமுலாகியுள்ள நடமாட்டத் தடையைக் கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது இதற்கமைய எதிர்வரும் 21,22,23 ஆகிய திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சம்பந்தனை மீண்டும் தொடர்பு கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ …..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு இருதரப்புச் சந்திப்புக்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது ஈற்றில் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி தரப்பால் இரத்தச் செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார். சிறிலங்கா  ஜனாதிபதி கோட்டாபய ...

Read More »

IS அமைப்புக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் சிட்னி இளைஞர் கைது!

சிட்னியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் IS அமைப்பினருக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். Chester Hill மற்றும் Sefton ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிரவாத அமைப்பொன்றின் அங்கத்தவராக செயற்பட்டார் என்ற அடிப்படையில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்துவைத்திருந்ததாகவும், வெடிமருந்து செய்முறைகளை வைத்திருந்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக இந்த இளைஞர் ...

Read More »

ஈரான் அதிபர் தேர்தல்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ஈரானில் அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாக உள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. எனினும், அதிபர் தேர்தலில் மக்கள் ஆர்வமில்லாமல் வாக்களித்ததன் காரணமாக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின. அதிபர் தேர்தலில் ஈரான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி ...

Read More »

நிலையின்மையின் தத்துவார்த்தத் தேடல்

பெர்சேபோலிஸ் மர்ஜான் சத்ரபி வின்டேஜ் புக்ஸ் விலை: ரூ.599 மர்ஜான் சத்ரபியின் புகழ்பெற்ற கிராபிக் நாவலான ‘பெர்சேபோலிஸ்’ வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாவல் மையப்படுத்தியிருக்கும் காலகட்டமோ இன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் முந்தையது. நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அந்நாவலில் பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் இன்றும் தன்மை மாறாமல் நிகழ்ந்துவருகின்றன. கருத்தியல் அதிகாரத்தின் விளைவுகள் எல்லாக் காலகட்டத்திலும் ஒரே தன்மையுடையதாகத்தான் இருக்கின்றன என்பதை அந்நாவல் உணர்த்துகிறது. ஈரானில், 1979-ல் இஸ்லாமியப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை ஆடைக் கட்டுப்பாட்டு, மதரீதியான அடக்குமுறைகள் ஆகியவை நடைமுறையில் இருக்கவில்லை. ...

Read More »

குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே குருந்தூர்மலையினை மீட்க வழக்கு விரைவில் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு ...

Read More »