சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன் போது அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை – தீர்வு எம்மிடமே உள்ளது. அதனை உள்நாட்டுக்குள்தான் தேட வேண்டும் அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை என்றவாறு குறிப்பிட்டிருப்பதான, செய்திகளை பார்க்க முடிந்தது. இதில் பங்குகொண்ட ஒரு செய்தியாளர் தனது முகநூலில் பின்வருமாறு ...
Read More »செய்திமுரசு
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை!
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை. எந்தவொரு வைபவத்திலும் எவரும் பாட முடியும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரச தகவல் தினைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ; ஊடகவியலார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ; பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் கூறுகையில், ”எந்தவொரு வைபவத்திலும் எவரும் பாட முடியும் தான் விரும்பிய மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ...
Read More »பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தோல்வியில் முடிய நானே காரணம்!
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட எம்.சி.சி மற்றும் சோபா உடன்படிக்கைகளை மட்டுமல்லாது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் முழுமையாக எதிர்த்த நபர் நானே. அதனால் தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தோல்வியில் முடிந்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன :- ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. இதுதான் உண்மையாகும், இதன் காரணமாகவே மக்கள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தை வழங்கினர். ...
Read More »69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – பதிவுகளை நம்பலாமா?
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில், பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் குழு புகைப்படம் ஒன்று சுவாரஸ்ய உலக சாதனையை விளக்கும் வகையில் பகிரப்படுகிறது. புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே பெண் தான் பெற்றெடுத்தார் என கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில், “ஒரே பெண்மணிக்கு பிறந்த அதிகளவு குழந்தைகள் எண்ணிக்கை 69. ரஷ்யாவை சேர்ந்த திருமதி வசில்வேயா என்பவர் 16 இரட்டை குழந்தைகள், ஏழு முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், நான்கு முறை ஒரே பிரசவத்தில் நான்கு ...
Read More »காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து தவான் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார் தவான். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு பீல்டிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கும் செய்யவில்லை. ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்த பின்னர்தான் அவரது காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி ஆக்லாந்து புறப்பட்டது. ...
Read More »விக்கி – மகிந்த – வாங்ஜி
கடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்தவாரம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் சென்னைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்களும் இவை. இரண்டுக்கும் மத்தியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி தெரிவித்துள்ள கருத்துக்களும் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தெளிவுற எடுத்துக்காட்ட வல்லவைகளாய்க் காணப்படுகின்றன. “”இலங்கையில் எந்த ...
Read More »அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2020
வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 12-01-2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர் ...
Read More »ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தேவை இல்லை என்பதா?
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் ...
Read More »தமிழினத்தின் போராட்டம் தொடரும்!
“தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று 19ம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் ...
Read More »இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!
2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் ...
Read More »