செய்திமுரசு

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகள்……!

2020- 21 நிதியாண்டின் புலம்பெயர்வு திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை குறைத்திருக்கிறது. ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இந்த மாற்றத்தை ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கடந்த ஆண்டு திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு 1,08,682 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 79,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் எந்த பகுதியிலும் வேலைச்செய்ய அனுமதிக்கும் Skilled Independent விசாவுக்கான இடங்கள் 6,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், நிறுவனங்கள் ...

Read More »

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் எச்சரித்துள்ளார். அவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்: கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருடாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்குகிடைத்த தகவலின்படி சந்தேகத்தில்பேரில் பலரை தேடிப்பிடித்து ...

Read More »

ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த தம்பதி

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர் மாடி வீட்டில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. அலெக்சாண்டர் வயது 30, மற்றும் திருமதி விக்டோரியா யாகுனின் வயது 26,ஆகியோர் குறித்த தொடர் மாடி வீட்டில், தமது ஐந்து வயது பெண் குழந்தை, மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். குறித்த தம்பதியினர் உட்கொண்ட ஊறுகாய் விஷமானதையடுத்து ...

Read More »

20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்!

“சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அதாவது இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் மற்றும் முஸ்லிம்களையும் கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மறுத்தமையும் அனைத்து அதிகாரத்தையும் தனி ஒரு இடமாக மத்தியினுள் மையப்படுத்தும் போக்கு மட்டுமல்ல சர்வாதிகாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த சபையில் வெளிப்படுத்துகிறேன்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 20ஆம் திருத்தச் ...

Read More »

மதரஸா மீது விமானதாக்குதல்- 12 சிறுவர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் தகார் மாநிலத்தில் மதபாடசாலையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிராமமொன்றில் அமைந்திருந்த மத்ரஸாவின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள உள்ளுர் அதிகாரிகள் மசூதியின் இமாமும் காயமடைந்துள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல் இடம்பெற்றவேளை இமாமும் மாணவர்களும் மாத்திரம் மசூதியிலிருந்தனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்கள் அனைத்தும் சிறுவர்களின் உடல்கள் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. மாநில ஆளுநரின் பேச்சாளரும் சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர் ...

Read More »

தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவ்

இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்ததது. இந்திய கிரிக்கெட் கபில் தேவின் சாதனைகள் நீங்காத இடத்தை பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி ...

Read More »

இருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்

இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக சில முக்கியமான பௌத்த மத பீடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்திருந்தன. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்த பலவீனங்களைக் கொண்டு இருபது நிறைவேற்றப்பட்டுள்ளது எனலாம். அத்தகைய பலவீனத்தை அதிகம் வெளிக்காட்டியவர்களாக சிறு கட்சிகளின் தலைமைகளைக் கூறலாம். ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தவிர்ந்த ...

Read More »

டயானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்த நிலையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆதரவாக வாக்களித்திருந்தார். இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,  20 ஆவது திருத்தச்சட்டமூலம் சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் முடிவின் ...

Read More »

மட்டு. மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து சமல் தலைமையில் அவசர கூட்டம்

கொழும்பு பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மகாவலி காணி தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது. இந்தக் கூட்டத்திற்கு மட்டக்களப்பை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பா.உறுப்பினர்களான கருணாகரன், சாணக்கியன், சார்ல்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகளும் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக மங்களேஸ்வரி ...

Read More »

கொவிட்- 19: தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் மரணம்!

பிரேஸிலில் கொரோனாத் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்(Oxford University), அஸ்ட்ரா ஜெனேகா (Astra Zeneca) மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனைகள்  பிரித்தானியா, இந்தியா, பிரேஸில், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறன. இந் நிலையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் திடீரென உயிரிழந்ததாக பிரேஸில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் உயிரிந்த 28 வயதுடைய  தன்னார்வலர், ரியோ ...

Read More »