செய்திமுரசு

மன்னாரில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அமெரிக்க டொலர்கள் மீட்பு!

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் தலைமன்னாரிலிருந்து மன்னாருக்கு மோட்டர் சைக்கிளில் பயணித்த நபரை தாராபுரம் இராணுவ சோதனை சாவடியில் சோதனையிட்டபோது ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சுதந்திரத் தினத்தன்று (04.02.2020) தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நண்பகல் தலைமன்னாரிலிருந்து மன்னாரை நோக்கி ஒரு மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார். அப்பொழுது தாராபுரத்திலுள்ள இராணுவ சோதனை சாவடியிலுள்ள பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரையும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சோதனையிட்டுள்ளனர். அப்பொழுது மோட்டர் சைக்கிள் இருக்கையின் அடியில் ...

Read More »

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கியது!

கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 490-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற வைத்தியர் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டார். சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் ...

Read More »

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு எனது நிர்வாகம் உதவும்!

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எனது நிர்வாகம் சீன அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 490 ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிக்கபட்ட ஹுபே மாகாணத்தில் மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சீனாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸுக்கு 20,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா உதவும் ...

Read More »

ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்!

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது. இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்களைக் கவுரவிப்பதற்காக நாம் ஒன்று கூடி இருக்கிறோம். தொடர்ந்து இந்த கருப்புக் கோடை காலத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் ...

Read More »

இராணுவ பதக்கங்களுடன் சிறிலங்கா ஜனாதிபதி!

சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில்  சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. சிறிலங்காவின்  ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சிறிலங்காவின்  72 ஆவது சுதந்திர தினம் நேற்று சுதந்திர சந்துக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி வருகை தந்த வேளையில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த பதக்கங்கள் ஜனாதிபதி இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் அவர் ...

Read More »

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை!

சிறிலங்காவின்  72 ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேசன் இலங்கையரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் மனோகனேசன் அவருடைய உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். இலங்கையர் என்ற ...

Read More »

பிரிட்டிஸ்காரர்களைக் காட்டிலும் சிங்களவர்களிடமே அதிகம் அடிமைப்படுகிறோம்!

இலங்கை 1948 மாசி 4ஆம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் வெளிப்படையாகவும், தீவிரமாகவும் நடக்கின்றன. இந்த நிலையிலேயே வலிந்து காணாமல் ...

Read More »

பொதுமன்னிப்பில் 17 கைதிகள் யாழில் விடுதலை!

சிறிலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். நாடுமுழுவதும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு,நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும். வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள், கொள்ளை மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக ...

Read More »

ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது!

எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். ​சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ...

Read More »