சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. சிறிலங்காவின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும்
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தினம் நேற்று சுதந்திர சந்துக்கத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி வருகை தந்த வேளையில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த பதக்கங்கள் ஜனாதிபதி இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் அவர் பெற்ற பதக்கங்கள் என கூறப்படுகின்றது.
குறிப்பாக அவரது இராணுவ சேவைக் காலத்தில் ரண விக்கிரம மற்றும் ரண சூர பதக்கங்கள் அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த பதக்கங்களுடன் அவர் ; சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டார். சிறிலங்காவின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களுடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குடிப்பிடத்தக்கது.